ஐந்து பந்து வீணாக்கினேன்…சக வீரர்கள் என்ன சொல்வார்கள்..கடைசி நிமிடம் என்ன நடந்தது – விஜய் சங்கர் உருக்கம்

shankar
- Advertisement -

இலங்கையில் நடைபெற்று வந்த நிடாஸ்கோப்பை முத்தரப்பு போட்டியின் இறுதி ஆட்டத்தின் போது மிகவும் மோசமாக விளையாடிய தமிழகவீரரான விஜய்சங்கர் பந்தை சிக்ஸருக்கு தூக்க முயற்சித்து அவுட்டாகினார்.விஜய்சங்கரின் மோசமான ஆட்டம்குறித்து தற்போது பலரும் சமூகவலைத்தளங்களில் விமர்சித்து வந்த நிலையில் தற்போது சிலர் அணியிலிருந்து விஜய்சங்கரை நீக்கவேண்டும் என்றும் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

- Advertisement -

விஜய்சங்கர் கேலிகள் தன்னை பாதிப்பதை விடவும் “சமூக வலைத்தளங்களில் வரும் பரிதாபமான கவலைப்படாதீர்கள்” மெசேஜ்கள்தான் இப்போது எனக்கு பிரச்சினையாக உள்ளது என விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தான் அன்று அவுட்டான பின்னர் அணியின் பிற வீரர்கள் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் உடைமாற்றிடும் அறையில் என்ன நடந்தது என்று அவர் விளக்கி இருக்கிறார்.

அன்றைய தினம் நடந்தது குறித்து பேசிய விஜய்சங்கர் 18-வது ஓவரில் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசய பந்துகளை சரியாக கணிக்காமல் சுற்றி பந்து மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது.இதேபோல “ஐந்து பந்துகளை தொடர்ச்சியாக நான் மிஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. அது துரதிர்ஷ்டவசமானது.எப்போதாவது ஒருமுறைதான் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும் கிடைத்த அந்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டேன். இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கின்றது” என்றார்.

மேலும் பேசிய அவர் ”நான் அந்த பந்தை சிக்ஸருக்கு தான் தூக்க முயற்சித்தேன். ஆனால் பந்து மிஸ் ஆகி விக்கெட்டாகிவிட்டது. ஒருவேளை நான் அடித்த அந்த பந்து சிக்ஸராக மாறி இருந்தால் நிலைமை மாறி இருக்கும். கடுமையாக எடுத்த பயிற்சியெல்லாம் அந்த ஐந்து பந்தில் வீணாகிவிட்டது” என்றார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய அவர் ”இந்த தொடர் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தையும் பக்குவத்தையும் கொடுத்துள்ளது.கடினமான சந்தர்ப்பங்களில் எப்படி ஆட வேண்டும் என்று கற்றுக்கொள்வேன். இனிமேல் இதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்வேன். நான் விரைவில் மீண்டு வருவேன். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் அதில் சிறப்பாக விளையாடுவேன் என்றார்.என்னுடைய பெற்றோர்களும் நண்பர்களும் என்னை புரிந்து கொண்டார்கள் யாரும் என்மேல் கோபப்படவும் இல்லை.

Vijay

சிலநேரங்களில் நாம் எதிர்பார்க்காத சில நிகழ்வுகள் நடப்பது இயல்பு தான் எங்களுக்கும் இதுபோன்று சிலநேரங்களில் நடந்துள்ளது என்று கூறி அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்றார்கள்.சகவீரர்கள் அனைவரும் இறுதிப் போட்டியின் வெற்றியை மகிழ்வுடன் கொண்டாடிய போது உண்மையில் என்னால் அந்த வெற்றியை கொண்டாட முடியாமல் நான் மனம் உடைந்து போயிருந்தேன். நான் ஹீரோவாக எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு அது, நான் போட்டியை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும் என்றார்.

Advertisement