சன் ரைசர்ஸ் அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய மற்றொரு முன்னணி வீரர் – விவரம் இதோ

srh

ஐபிஎல் தொடரில் பல தமிழக வீரர்கள் இந்த வருடம் விளையாடி வருகின்றனர். பெங்களூரு அணியில் வாசிங்டன் சுந்தர், ஐதராபாத் அணியில் விஜய் சங்கர் மற்றும் தங்கராசு நடராஜன் கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சித்தார்த் மணிமாறன், பஞ்சாப் அணியில் முருகன் அஸ்வின் என ஐபிஎல் தொடரில் தங்களது திறமைகளை தமிழக வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Dubai

சன் ரைசர்ஸ் அணியில் ஆடும் விஜய் சங்கர் அந்த அணியின் ஒரு மிகச்சிறந்த வீரராக இருக்கிறார். ஒரு ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வரும் அவர் அவ்வப்போது தேவையான அதிரடியாக 30 ரன்கள் எடுத்து கொடுத்து அணியை வெற்றிபெற வைத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவரது பந்து வீச்சும் சொல்லத் தகுந்த வகையில் தான் இருக்கிறது.

பெரிதாக டெக்னிக் இல்லை என்றாலும் தெளிவான நேரத்தில் தெளிவான பந்துவீசி பெரியபெரிய விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இவர் வல்லவர். இதே அணியில் விளையாடி கொண்டிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக திடீரென்று ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சங்கருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.

shankar

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து இவர் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் ஹைதராபாத் அணி இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை இன்னும் அதிகபட்சம் ஐந்து போட்டிகள் தான் இருக்கும்.

- Advertisement -

இந்த போட்டிகளில் இவரால் ஆட முடியாது என்று தெரிகிறது ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.