- Advertisement -
ஐ.பி.எல்

நடப்பு 2025 ஐ.பி.எல் சீசனில் முதல் நபராக மோசமான சாதனையை நிகழ்த்திய விஜய் சங்கர் – விவரம் இதோ

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

விஜய் ஷங்கர் நிகழ்த்திய மோசமான சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 77 ரன்களையும், ஸ்டப்ஸ் 24 ரன்களையும் குவித்தனர். சென்னை சார்பாக கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே குவித்ததால் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக விஜய் சங்கர் 54 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 69 ரன்களையும், தோனி 30 ரன்களையும் குவித்து அசத்தினர். இருப்பினும் இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்த விஜய் சங்கர் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் நபராக ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது 43 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் நடப்பு சீசனில் மிகவும் மெதுவாக அரைசதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் அவருக்கு அடுத்து ரச்சின் ரவீந்திரா 42 பந்துகளிலும், லிவிங்ஸ்டன் 39 பந்துகளிலும் அரைசதம் அடித்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பும்ராவின் வருகையால் நிம்மதி அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ்.. எப்போது விளையாடுவார்? – விவரம் இதோ

சென்னை அணி நேற்று பெற்ற தோல்வியுடன் 3 தோல்விகளை சந்தித்து புள்ளிபட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த தொடரில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்த சென்னை அணியானது அடுத்ததாக ஏப்ரல் 8-ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக விளையாடவுள்ளது.

- Advertisement -