பும்ராவின் வருகையால் நிம்மதி அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ்.. எப்போது விளையாடுவார்? – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடைசியாக ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். அந்த தொடரின் ஐந்தாவது போட்டியின் போது ரோகித் சர்மா மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அந்த போட்டியிலிருந்து விலகியதால் இந்திய அணியை கேப்டனாகவும் ஜஸ்ப்ரீத் பும்ரா வழிநடத்தி இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்த ஜஸ்ப்ரீத் பும்ரா :

ஆனால் அந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் பந்துவீசுகையில் ஏற்பட்ட அசகரியம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறிய பும்ராவிற்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதுகு பகுதியில் அழுத்த முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து காயத்திற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்த பும்ரா கடைசி சில மாதங்களாகவே எவ்வித தொடர்களிலும் இந்திய அணிக்காக விளையாடவில்லை. குறிப்பாக நடைபெற்று முடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெறவில்லை.

அதனை தொடர்ந்து கடந்த பல மாதங்களாகவே தீவிர சிகிச்சை மற்றும் பயிற்சியில் இருந்து வரும் அவர் எப்போது கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது மீண்டும் பும்ரா கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடலாம் என பிசிசிஐயின் மருத்துவக்குழு அவருக்கு அனுமதி அளித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக நடப்பு 2025 ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அவர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்ற தகவலை தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதால் பும்ராவின் வருகை அந்த அணிக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

இதையும் படிங்க : 35 வயசுன்னு ஓகே.. கோவாவுக்கு போய் கேரியரை கெடுத்துக்காம இந்தியாவுக்காக இதை செய்ங்க.. வாசிம் ஜாபர் அட்வைஸ்

ஆனாலும் பும்ரா தற்போது தான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால் அவர் எப்போது விளையாடுவார் என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. ஏனெனில் ஒருவேளை அவசரப்பட்டு அவரை விளையாட வைக்கும் பட்சத்தில் அது மோசமான முடிவாக கூட மாறலாம் என்பதனால் ஓரிரு போட்டிகளுக்கு பின்னர் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement