இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உள்ளூரில் மும்பைக்காக விளையாடி வரும் அவர் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் 400 ரன்கள் அடித்து இந்தியா ஃபைனல் செல்ல உதவினார்.
அப்படியே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் வெற்றிகளில் பங்காற்றி நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளார். அதே போல டி20 கிரிக்கெட்டிலும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சதத்தை அடித்த அவர் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல உதவினார்.
வெளியேறும் ஜெய்ஸ்வால்:
அதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மும்பை அணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள ஜெய்ஸ்வால் கோவாவுக்காக விளையாட உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவதற்கு முக்கிய காரணமான மும்பையை விட்டு அவர் வெளியேறுவதாக அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இருப்பினும் சீனியர் மும்பை வீரருடன் சண்டை ஏற்பட்ட காரணத்தாலும் கோவா கிரிக்கெட் அணியில் கேப்டன்ஷிப் வழங்கப்படுவதாலும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் மும்பையை விட்டு வெளியேறி ஜெயஸ்வால் தமது கேரியரை கெடுத்துக் கொள்ளாமல் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ஜாபர் அறிவுரை:
“ஜெய்ஸ்வால் கோவாவுக்காக விளையாடச் செல்ல உள்ளது எனக்கு ஆச்சரியமாக அமைகிறது. கோவா என்ன கொடுத்தாலும் நீங்கள் இந்த சமயத்தில் மும்பையை விட்டு செல்லக்கூடாது. ஒருவேளை உங்களுக்கு 34 – 35 வயதாகி பின்னர் வெளியேறினால் அது பரவாயில்லை. என்னைக் கேட்டால் அவர் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவதில் கவனம் செலுத்தக் கூடாது”
இதையும் படிங்க: அவசரப்படாதீங்க இன்னும் 10 மாசம் இருக்கு.. என்னோட ஓய்வை அது தான் முடிவு செய்யும்.. தோனி பேட்டி
“மாறாக இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். அதுவே அவருடைய முதன்மை கவனமாக இருக்க வேண்டும். தற்சமயத்தில் ஃபார்மை தேடி வரும் அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிராக கடினமாக அடித்து 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை பறக்க விட்டார். அப்படி 8 பவுண்டரிகள் அடித்தாலும் அவர் நிறைய டாட் பந்துகளை எதிர்கொண்டார். அவருக்கு எதிராக பஞ்சாப் நன்றாக பவுலிங் வீசியது” என்று கூறினார்.



