அவசரப்படாதீங்க இன்னும் 10 மாசம் இருக்கு.. என்னோட ஓய்வை அது தான் முடிவு செய்யும்.. தோனி பேட்டி

MS Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த சென்னை புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தோல்விகளுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 30 ரன்கள் கூட அடித்துக் கொடுக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அதே போல மிடில் ஆர்டரில் சிவம் துபே போன்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடத் தடுமாறுகிறார்கள். அதனால் லோயர் ஆர்டரில் வரும் தோனி மெதுவாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். ஆனால் அதற்காக ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியைத் துவங்காமல் கடைசி வரை மெதுவாகவே விளையாடும் அவர் சென்னை அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளார்.

- Advertisement -

ஓய்வு எப்போது:

இருப்பினும் அதைப் புரிந்துக் கொள்ளாத விமர்சகர்கள் மற்றும் எதிரணி ரசிகர்கள் தோனி தான் சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று சொல்லி ஓய்வு பெறுமாறு விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தற்போதைய நிலையில் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று தோனி தெரிவித்துள்ளார். அதை முடிவு செய்ய இன்னும் 10 மாதங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனவே 10 மாதங்கள் கழித்து தம்முடைய உடல் எப்படி ஒத்துழைக்கிறதோ அதை வைத்து ஓய்வு பற்றி முடிவெடுப்பேன் என்றும் தோனி கூறியுள்ளார். இது பற்றி ராஜ் ஷாமணி எனும் யூடியூப் பக்கத்தில் தோனி தெரிவித்தது பின்வருமாறு. “தற்போது ஓய்வு இல்லை. இப்போதும் நான் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறேன். அதை நான் மிகவும் எளிமையாக வைத்திருக்கிறேன்”

- Advertisement -

10 மாதங்கள் இருக்கு:

“ஒரு சமயத்தில் ஒரு வருடத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும் நான் தற்சமயத்தில் 43 வயதில் இருக்கிறேன். 2025 ஐபிஎல் முடியும் போது எனக்கு 44 வயது ஆரம்பமாகும். எனவே அடுத்த வருடம் விளையாடுவேனா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு எனக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. அதை நான் முடிவு செய்ய மாட்டேன்”

இதையும் படிங்க: அந்த சி.எஸ்.கே வீரரை அடிக்கப்போறேனு சொல்லிட்டு தான் கே.எல் ராகுல் சம்பவம் செய்ஞ்சாரு – ஹேமங் பதானி

“எனது உடல் முடிவு செய்யும். எனவே அடுத்த ஒரு வருட காலத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்” எனக் கூறினார். மொத்தத்தில் மனதளவில் தாம் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக தோனி கூறியுள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றிருந்தால் இதே விமர்சனங்கள் தோனியை ஓய்வு பெறுமாறு வற்புறுத்த மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement