IND : விஜய் ஷங்கர் எல்லாம் வேலைக்கே ஆகாது. இவரை சேர்த்திருக்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா புலம்பல்

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Vijay-Shankar
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

உலகக்கோப்பைக்கான தொடரில் இந்திய அணியில் விஜய் ஷங்கர் தேர்வானது குறித்து பலரும் பல கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில் விஜய் ஷங்கர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை கூறியுள்ளார். இந்த கருத்தில் அவர் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்தும், விஜய் ஷங்கர் குறித்தும் விமர்சிக்கும் வகையில் கருத்தினை அளித்துள்ளார்.

pant

அதன்படி அவர் கூறுகையில் : விஜய் ஷங்கர் சமீபத்தில் பெரியதாக எதுவும் செய்யவில்லை. பண்ட் டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே என்னை பொறுத்தவரை பண்ட் 4 ஆவது வீரராக அணியில் தேர்வாகி இருக்கவேண்டும். மேலும், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட உள்ளது. அதுவும் தவறான முடிவே இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் 15 பேர் கொண்ட குழுவில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisement