மைதானத்தில் வலியால் சுருண்டு விழுந்த விஜய் ஷங்கர். தேற்றிய ராகுல் – என்ன நடந்தது ?

Shankar
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 43வது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தீர்மானித்தார்.

KXIPvsSRH

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 32 ரன்களும், ராகுல் 27 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் பின்னர் இறுதிகட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக வார்னர் 35 ரன்களையும், விஜய்சங்கர் 26 ரன்களையும் குவித்தனர். இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது மட்டுமின்றி பிளே-ஆப் சுற்றுக்கு வாய்ப்பை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

kxip

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணியின் வீரரும், தமிழக வீரருமான விஜய்சங்கர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மைதானத்திலேயே வலியால் துடித்தார். கீழே விழுந்து துடித்த அவரை பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் அருகில் சென்று தேற்றினார். அது மட்டுமின்றி அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டது. இதற்கு காரணம் யாதெனில் :

Vijay-Shankar

வெற்றிக்கு தேவையான நேரத்தில் முக்கியமான ஒரு ரன் எடுக்க ஓடி வந்த போது பஞ்சாப் அணியின் வீரரான பூரான் பந்தை பிடித்து வேகமாக த்ரோ செய்ய அந்த பந்து தவறுதலாக ரன்னிங் ஓடி வந்த விஜய் சங்கரின் தலையில் பட்டது. அதிவேகமாக பந்து தலையில் தாக்கியதால் விஜய் சங்கர் அதே இடத்தில் விழுந்து சிறிது நேரம் வலியால் துடித்தார். பின்னர் மீண்டும் சிறிது நேரம் கழித்து அவர் விளையாடி 26 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement