சாஹலை தொடர்ந்து சைலென்டாக நிச்சயதார்த்தை முடித்த அடுத்த இந்திய வீரர் – வைரலாகும் புகைப்படம்

India

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த 4 – 5 மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாததால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இந்நிலையில் இப்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது சில முக்கிய முடிவுகளை எடுத்து வரும் வேளையில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சமீபத்தில் தனது தோழியை நிச்சயதார்த்தம் செய்தார்.

Ind

அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு இந்திய வீரர் தனது நிச்சயதார்த்தத்தை சைலண்டாக முடித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமானவர் விஜய் ஷங்கர். இந்திய அணியின் ஆல்ரவுண்டரும் தமிழக வீரருமான விஜய் சங்கர் இதுவரை இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் இவர் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 29 வயதாகும் இவர் கடந்த உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இடம் பிடித்திருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆல்-ரவுண்டராக இருந்தும் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

💍 PC – @ne_pictures_wedding

A post shared by Vijay Shankar (@vijay_41) on

29 வயதாகும் விஜய் சங்கர் நேற்று 20 ஆம் தேதி வைஷாலி என்பவரை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். மேலும் அவரது நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளளார். அவரது இந்த பதிவினை கண்ட இந்திய அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் விஜய் சங்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Shankar

இன்னும் ஓரிரு நாளில் இந்த வருட ஐ.பி.எல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க இருக்கிறார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் முழுமூச்சுடன் விளையாட இருக்கும் இவர் மீண்டும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிக்க ஆர்வத்துடன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.