என்னுடைய இந்த முதல் சதத்தை நான் இவருக்கு அர்ப்பணிக்கிறேன் – விஹாரி உருக்கம்

Vihari
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

vihari 2

- Advertisement -

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விகாரி 111 ரன்களை எடுத்தார். இஷாந்த் ஷர்மா 57 ரன்களை எடுத்தார். அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விகாரி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை விளாசினார். சதமடித்த விகாரி தற்போது அந்த சதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது : எனக்கு 12 வயது இருக்கும் பொழுது எனது தந்தை இறந்து விட்டார். அந்த சமயத்தில் நான் எப்போது முதல் சர்வதேச சதம் அடிக்கின்றேனோ அப்போது அதனை என் தந்தைக்கு அர்ப்பணிப்பேன் என்று தீர்மானித்தேன்.

அதன்படி இன்று நான் இந்த சதத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். இன்று எனக்கு ஒரு நெகிழ்ச்சியான நாள் என் தந்தை எங்கிருந்தாலும் என்மீது பெருமை கொள்வார் என நம்புகிறேன் எனது தந்தைக்கு கொடுத்த நினைத்ததை சாதித்து விட்டேன் என்று விஹாரி உருக்கமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement