இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் பலர் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த ஆண்டு அறிமுகமான கேரள இளம் வீரரான விக்னேஷ் புத்தூர் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றவர்.
2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய விக்னேஷ் புத்தூர் :
தனது அறிமுக போட்டியிலேயே சென்னை அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் இந்த தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடு இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தினை பிடித்து பலரது மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று இருந்தார். அதோடு அவரது இந்த சிறப்பான செயல்பாடு அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்ற அளவுக்கு அவருக்கு ஆதரவுகளை பெற்று தந்தது.
இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும் அவரது கட்டுக்கோப்பான பந்துவீச்சு அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றிருந்தது. அதோடு மும்பை இந்தியன்ஸ் அணியில் இனிவரும் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்றும் நிச்சயம் இந்திய அணிக்கு தகுதிபெற கூட அவருக்கு வாய்ப்புள்ளதாக பலராலும் பேசப்பட்டது.
ஆனால் இவை அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விக்னேஷ் புத்தூருக்கு தாடை பகுதியில் எலும்பு அழுத்த முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த எஞ்சியுள்ள 2025 ஐ.பி.எல் தொடருக்கான மும்பை அணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறார் என்றும் அவருக்கு பதிலாக ரகு சர்மா என்கிற உள்நாட்டு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி மாற்று வீரராக தேர்வு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கருதப்பட்ட விக்னேஷ் புத்தூர் பாதியிலேயே இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் சோகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மும்பை அணியில் இடம் பிடித்துள்ள ரகு சர்மா பஞ்சாப் மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக 11 முதல்தர போட்டிகளிலும், 9 லிஸ்ட் ஏ போட்டியிலும், 3 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
இதையும் படிங்க : லண்டனுக்கு அனுப்பி எனக்கு உதவி செய்த ஆர்.சி.பி அணிக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் – சுயாஷ் சர்மா நெகிழ்ச்சி
விஜய் ஹசாரே தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவரின் திறமையை கருத்தில் கொண்டே தற்போது மும்பை அணி அவரை அணிக்குள் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



