12 ஆண்டுகள் நாட்டிற்காக விளையாடியது பெருமை. ஓய்வை அறிவித்த – தெ.ஆ நட்சத்திர வீரர்

Philander-1

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் வெர்னான் பிளாண்டர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். 34 வயதான பிளாண்டர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

philander

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெய்ன் மற்றும் மோர்னே மோர்க்கல் ஆகியோருடன் இணைந்து பிளாண்டர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்தார். தற்போது ஸ்டெயின் மற்றும் மோர்க்கல் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த பிளாண்டர் தற்போது அவரும் ஓய்வு முடிவை தெரிவித்துள்ளார்.

இதுவரை தென் ஆப்பிரிக்க அணிக்காக 60 டெஸ்ட் மற்றும் 30 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 டி20 போட்டிகள் என அனைத்து வடிவ கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 216 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளார் மேலும் 13 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற விரும்புவதாக அணி நிர்வாகம் தெரிவித்ததாகவும், நிர்வாகமும் அவர் ஓய்வு முடிவை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

philander

இதுகுறித்து பிளாண்டர் கூறுகையில் : என் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த எனது தந்தைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டிற்காக 12 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியது பெருமையாக உள்ளது. என் பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி மேலும் என் ரசிகர்களுக்கும் நன்றி என்று பிளாண்டர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -