இறுதிவரை நான் பொறுமையாக விளையாட இதுதான் காரணம் – வெங்கடேஷ் ஐயர் கொடுத்த விளக்கம்

Venky
- Advertisement -

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 14-வது ஐபிஎல் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய மும்பை அணி 161 ரன்களை மட்டுமே குவிக்க பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

MI vs KKR Pat CUmmins Venkatesh Iyer

- Advertisement -

பின்னர் அந்த இலக்கினை சேசிங் செய்து விளையாடிய கொல்கத்தா அணி 16 ஓவர்களின் முடிவிலேயே 162 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரசல் ஆட்டமிழந்த பிறகு பின்வரிசையில் களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் அடிக்க போட்டி முன்கூட்டியே முடிவடைந்தது.

அதேபோன்று அவர் ஒருபுறம் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாட மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய துவக்க வீரர் வெங்கடேஷ் 41 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். எப்போதுமே ஐபிஎல் போட்டிகளில் அதிரடியான துவக்கம் தரும் இவர் நேற்றைய போட்டியில் மிகவும் பொறுமையாக விளையாடியது அனைவரது மத்தியிலும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

venky 1

இந்நிலையில் அப்படி மும்பை அணிக்கு எதிராக தான் பொறுமையாக விளையாட என்ன காரணம் என்பது குறித்து போட்டி முடிந்து வெங்கடேஸ் ஐயர் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த மைதானம் பேட் கம்மின்ஸை தவிர மற்ற அனைவருக்குமே பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தது என்று கூறலாம். ஏனெனில் பந்து சற்று நின்று வந்ததால் சரியான ஷாட்டுகளை விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இருப்பினும் இந்த போட்டியில் இறுதி வரை நின்று வெற்றி பெற்று கொடுத்ததில் மகிழ்ச்சி. கம்மின்ஸ் அடித்த விதம் நம்பமுடியாத வகையில் இருந்தது. பேட்டிங்கிற்கு சாதகம் இல்லாத இந்த மைதானத்தில் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : கோலி மீண்டும் பழைய பார்ம்க்கு திரும்ப இதை செய்ய வேண்டும் – பாக் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஆலோசனை

நான் இறுதிவரை பொறுமையாக விளையாட காரணம் யாதெனில் : ஒருபுறம் நான் நிலைத்து நின்று விளையாடும் பட்சத்தில் மறுமுனையில் வரும் வீரர்கள் இயல்பாக அவர்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்கிற காரணத்தினால் நான் ஆங்கர் ரோலை எடுத்துக்கொண்டு இறுதிவரை களத்தில் இருந்தேன் என்று வெங்கடேஷ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement