கோலி மீண்டும் பழைய பார்ம்க்கு திரும்ப இதை செய்ய வேண்டும் – பாக் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஆலோசனை

Wasim Akram Virat Kohli
- Advertisement -

இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் மற்றும் பேட்ஸ்மேன் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் தற்போதைய தேதியில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். உலகின் எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு தரமான பவுலர்களையும் எதிர் கொள்ளும் திறமை கொண்ட அவர் தனது அபார திறமையால் கடந்த பல வருடங்களாக இந்தியாவிற்கு பல வெற்றிகளைத் தேடி கொடுத்து முக்கிய முதுகெலும்பு வீரராக உருவெடுத்துள்ளார். அதிலும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பின் அவரின் இடத்தில் விளையாடி வரும் விராட் கோலி அவரைப்போலவே ரன் மெசினாக பல ஆயிரம் ரன்களை குவித்து இந்திய பேட்டிங் துறையின் துருப்புச் சீட்டாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் 2017 முதல் 3 வகையான இந்திய அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்ட அவர் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகளை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தார்.

Virat

தடுமாறும் விராட் கோலி:
தற்போது 33 வயது மட்டுமே நிரம்பி உள்ள அவர் அதற்குள் 70 சதங்களை அடித்து சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் 3-வது இடத்தில் இப்போதே தன்னை ஒரு ஜாம்பவனாக நிரூபித்துள்ளார். அந்த அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த அவர் கடந்த 2019-க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார். 3 வகையான இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கும் கேப்டன்சிப் செய்து வந்த அவர் மீது ஒரு கோப்பையை வாங்கி தர முடியவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து திணிக்கப்பட்டது.

- Advertisement -

அதன் காரணமாக கேப்டன்சிப் பணிச்சுமை தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் சமீபத்தில் இந்தியா மற்றும் ஐபிஎல் உட்பட கேப்டனாக இருந்து வந்த அத்தனை பதவிகளிலும் இருந்து படிப்படியாக விலகி தற்போது சாதாரண வீரராக விளையாட தொடங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த ஜனவரி முதல் தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடர் வரை எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரப் பறவையாக விளையாடி வரும் அவரால் இன்னும் முழு பார்ம்முக்கு திரும்ப முடியவில்லை. இதனால் அவரின் அந்த 71-வது சதத்தை தேடிய பயணம் தொடர்கிறது.

virat

வாசிம் அக்ரம் ஆலோசனை:
அதிலும் சமீபகாலங்களாக அவர் எல்பிடபிள்யூ அல்லது எட்ஜ் வாங்கி சொற்ப ரன்களுக்கு அவுட்டாவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் ஆரம்ப கட்டங்களில் பந்து ஸ்விங் ஆகும் என்பதால் அதிலிருந்து தப்பிக்க விராட் கோலிக்கு ஒருசில ஆலோசனைகளை பாகிஸ்தானைச் சேர்ந்த ஆல் – டைம் கிரேட் ஜாம்பவான் ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் வழங்கியுள்ளார்.

- Advertisement -

இதுபற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அனேகமாக ஆரம்ப கட்ட ஓவர்களில் விராட் கோலி ஸ்டம்ப்பை மறைக்காமல் ஓப்பனாக (ஓப்பன் ஸ்டேன்ஸ்) நிற்க வேண்டும். அப்படி செய்தால் முதல் ஒரு சில ஓவர்களில் உள்ளே வரும் பந்துகளை எளிதாக சமாளித்து தவிர்க்க முடியும். இப்படி செய்தால் இன் ஸ்விங் ஆகும் பந்துகள் கால்களில் பட்டு எல்பிடபிள்யூ ஆவத்திலிருந்து தப்பிக்கலாம். அத்துடன் இந்த யுத்தியை பயன்படுத்தினால் அவரால் நேராக விளையாட முடியும். எனவே இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுவதாக உணர்ந்தால் விராட் கோலி இதை செய்யலாம். ஏனெனில் விராட் கோலியை போன்ற ஒரு தரமான வீரர் முதல் ஒரு சில ஓவர்கள் தாக்கு பிடித்து விட்டால் அதன் பின் அவரை தடுத்து நிறுத்துவது அவ்வளவு சுலபமான காரியமல்ல” என அக்கறையுடன் கூறினார்.

wasimakram

சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளியே செல்லும் பந்துகளை வேண்டுமெண்றே சென்று இழுத்து அடிக்க முயன்று எட்ஜ் வாங்கி அவுட்டாவதும் உள்ளே வரும் பந்துகளை காலில் வாங்கி எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாவதுமாக விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதிலும் ஐபிஎல் மற்றும் டெஸ்ட் என எந்த போட்டியாக இருந்தாலும் சமீப காலங்களாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் அதிகமாக அவுட்டாகி வருகிறார்.

இதையும் படிங்க : முதல்முறையாக மும்பையில் ஒரு அசோக் டிண்டா! ரசிகர்கள் வருதெடுக்கும் அளவுக்கு வரலாற்றில் படுமோசமான சாதனை

அதற்கு காரணம் அவர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் பெரும்பாலும் ஆரம்ப கட்ட ஓவர்களில் விளையாடுகின்ற சூழ்நிலைகளில் பந்து புதிதாக இருப்பதால் ஸ்விங் ஆகி அவரை ஏமாற்றி காலி செய்கிறது. எனவே அதிலிருந்து தப்பிக்க ஆரம்ப கட்ட ஓவர்களில் பந்து ஸ்விங் ஆகும் வரை ஓப்பன் ஸ்டேன்ஸ் யுக்தியை விராட் கோலி கையாள வேண்டும் என வாசிம் அக்ரம் கேட்டுக்கொண்டுள்ளார். அதை பயன்படுத்தி அவர் நிலைத்து நின்று விட்டால் அதன்பின் ரன்கள் அடிப்பது எளிது என அவர் கூறியுள்ளார்.

Advertisement