முதல்முறையாக மும்பையில் ஒரு அசோக் டிண்டா! ரசிகர்கள் வருதெடுக்கும் அளவுக்கு வரலாற்றில் படுமோசமான சாதனை

Pat Cummins Daniel Sams MI vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நேற்று ஏப்ரல் 7-ஆம் தேதியன்று நடந்த 14-ஆவது லீக் போட்டியில் வலுவான மும்பையை தோற்கடித்த கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. புனே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161/4 ரன்களை போராடி எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 52 ரன்களை விளாசினார்.

மிரட்டிய பட் கமின்ஸ், மும்பை தோல்வி:
அதை தொடர்ந்து 162 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர் அஜிங்கியா ரஹானே 7 (11) ரன்களிலும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 (6) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினர். அதன்பின் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் 17 (12) ரன்களிலும் நிதிஷ் ராணா 8 (7) ரன்களிலும் அவுட்டாகி கை கொடுக்கத் தவறினர். போதாகுறைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ரசல் 11 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்ததால் 101/5 என மீண்டும் தடுமாறிய கொல்கத்தாவின் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயருடன் இணைந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் யாருமே எதிர்பாராத வண்ணம் முதல் பந்திலிருந்தே மும்பையை புரட்டி எடுக்க தொடங்கினார். வெறும் 15 பந்துகளை மட்டுமே எதிர் கொண்ட அவர் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் உட்பட அரைசதம் கடந்து 56* ரன்கள் குவித்து ருத்ர தாண்டவம் ஆடியதால் 16-வது ஓவரிலேயே 162/5 ரன்களை எடுத்த கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. அவருக்கு உறுதுணையாக நின்ற வெங்கடேஷ் ஐயர் 50 (41) ரன்களை விளாசினார்.

மும்பையின் அசோக் டிண்டா:
முன்னதாக இந்த போட்டியில் 162 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தாவை ஆரம்பம் முதலே அபாரமாக பந்து வீசிய மும்பை தனது கட்டுக்குள் வைத்திருந்தது. அதிலும் பெரும் சவாலை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் காட்டடி வீரர் ரசல் ஆகியோரை சொற்ப ரன்களில் அவுட் செய்து மிடில் வரிசையில் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா ஆகியோரை குறைந்த ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்த மும்பை வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தது.

- Advertisement -

அதனால் கடைசி 30 பந்துகளில் கொல்கத்தா வெற்றிபெற 35 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை வீசிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் முதல் பந்திலிருந்தே ரன்களை வாரி வழங்கினார். அதிலும் அவரின் சுமாரான பவுலிங் பற்றி தெரிந்து வைத்திருந்த ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் பட் கம்மின்ஸ் அதை கச்சிதமாக பயன்படுத்திய அந்த ஓவரில் 6, 4, 6, 6 வரிசையாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் வெளுத்து வாங்கினார்.

அவருக்கு போனசாக 5-வது பந்தில் நோபால் வீசி 3 ரன்களை கொடுத்த டேனியல் சாம்ஸ் மீண்டும் கடைசி 2 பந்துகளில் 4, 6 என மொத்தம் 35 ரன்களை வாரி வழங்கினார். அவரின் இந்த மோசமான பந்து வீச்சால் குறைந்தது 19-வது ஓவர் வரை சென்றிருக்க வேண்டிய போட்டி 16-வது ஓவரிலேயே சப்பையாக முடிந்தது.

- Advertisement -

அப்படி தனது நாட்டு வீரரை பிரித்து மேய்ந்த பட் கம்மின்ஸ் வெறும் 14 பந்துகளில் 50 ரன்களை கடந்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் விளாசிய பேட்ஸ்மேன் என்ற இந்தியாவின் கேஎல் ராகுல் சாதனையை சமன் செய்து புதிய சாதனை படைத்தார். ஒரு வேகப்பந்து வீச்சாளரான பட் கமின்ஸ் இந்த அளவுக்கு அடிக்கிறார் என்றால் அதை வீசிய டேனியல் சாம்ஸ் பவுலிங் எந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்கும் என நினைத்து பாருங்கள். இப்படி ஒரே ஓவரில் மும்பையின் வெற்றியை கொல்கத்தாவுக்கு தாரைவார்த்த அவரை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

அதிலும் இதுபோன்ற வள்ளல் பரம்பரையில் முதல் பவுலராக கருதப்பட்ட இந்தியாவின் முன்னாள் வீரர் அசோக் டின்டாவின் லேட்டஸ்ட் வாரிசு தான் இந்த டேனியல் சாம்ஸ் என்பது போல விதவிதமாக அவரை ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

- Advertisement -

1. அதற்கு ஏற்றார் போல் இந்த போட்டியில் 35 ரன்களை அள்ளிக்கொடுத்த அவர் 15 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 30 ரன்களை கொடுத்த முதல் மும்பை பந்துவீச்சாளர் என்ற பரிதாப சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. டேனியல் சாம்ஸ் : 35 ரன்கள் – கொல்கத்தாவுக்கு எதிராக.
2. பவன் சுயல் : 28 ரன்கள் – பெங்களூருவுக்கு எதிராக.
3. மிட்சேல் மெக்லீகன் : 28 ரன்கள் – பஞ்சாப்க்கு எதிராக.

2. இத்துடன் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய 2-வது பந்துவீச்சாளர் என்ற பரிதாப சாதனையையும் படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. பரமேஸ்வரன் : 37 ரன்கள், பெங்களூருவுக்கு எதிராக, 2011.
2. ஹர்ஷல் படேல் : 37 ரன்கள், சென்னைக்கு எதிராக, 2021.
3. டேனியல் சாம்ஸ் : 35 ரன்கள், கொல்கத்தாவுக்கு எதிராக, 2022*

3. இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் குறைந்தது 25 ஓவர்கள் வீசிய பவுலர்களில் மிகவும் மோசமான சராசரியை கொண்ட பந்து வீச்சாளர் என்ற பரிதாபத்திற்கு அவர் உள்ளாகியுள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. டேனியல் சாம்ஸ் : 146.00*
2. விராட் கோலி : 92.00
3. திலகரத்னே தில்சன் : 73.60

இப்படி ஐபிஎல் வரலாற்றில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்து தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் முறையாக ஒரு அசோக் டிண்டா உருவாகியுள்ளது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க : எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்க? மும்பை – சென்னையை கலாய்க்கும் ரசிகர்கள் – எதற்கு தெரியுமா?

இவரை உடனடியாக அடுத்த போட்டியில் கழற்றி விட வேண்டுமென ரோகித் சர்மாவிடம் அந்த அணி ரசிகர்கள் கெஞ்சி கேட்டு வருகிறார்கள்.

Advertisement