- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs WI : இவரை ஏன் இந்திய டி20 அணியில் எடுத்தீங்க. உங்க செலக்சன் தப்பு – வெங்கடேஷ் பிரசாத் காட்டம்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் வாஷ்அவுட் செய்த இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேளையில் அடுத்ததாக இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரரான விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் அவரது இடத்தில் மூன்றாவது வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் சமீப காலமாகவே சொதப்பி வருகிறார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் அவர் டக் அவுட் ஆகி வெளியேறியது அனைவரின் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டது தவறான விடயம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

அதே போன்று இந்திய அணியின் தேர்வையும் அவர் சற்று காட்டமாக விமர்சித்து அந்த பதிவினை இட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : டி20 உலகக் கோப்பை தொடர் எதிரில் வரும் போது இதுபோன்ற செலக்சன்களை மனதில் வைத்து எடுக்கப்பட வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் விளையாட தேர்வு செய்யப்பட்டது தவறு.

- Advertisement -

சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இருக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்திருக்கக் கூடாது. மேலும் ரோகித் சர்மா, ராகுல் போன்ற நிலையான துவக்க வீரர்கள் இருக்கும்போது அணிக்கு சரியான பேலன்ஸை அளிக்கும் வீரர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs WI : அந்த 2 பேர்ல ஒருத்தருக்கு பதிலா தீபக் ஹுடாவிற்கு வாய்ப்பு குடுங்க – பாகிஸ்தான் வீரர் கருத்து

அவர் குறிப்பிட்டது போலவே ரசிகர்கள் பலரும் ஷ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் தற்போது தடுமாறி வருவதால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடாவை விளையாட வைக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by