IND vs WI : அந்த 2 பேர்ல ஒருத்தருக்கு பதிலா தீபக் ஹுடாவிற்கு வாய்ப்பு குடுங்க – பாகிஸ்தான் வீரர் கருத்து

Deepak Hooda
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsWI

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது t20 போட்டி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதைய அதிகரித்துள்ள வேளையில் இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தானின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இந்திய டி20 அணியில் தீபக் ஹூடா விளையாடாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில் :

Deepak Hooda 1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே ஷ்ரேயாஸ் ஐயர் இந்த டி20 தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் டி20 போட்டியில் விளையாடும் அளவிற்கு அவர் சரியானவரா என்றால் அது கேள்விக்குறி தான். அதேபோன்று சூரியகுமார் யாதவும் ஒருநாள் தொடரில் சரியாக விளையாடவில்லை.

- Advertisement -

இருந்தாலும் அவர் டி20 தொடரில் விளையாடி வருகிறார். அதே வேளையில் தீபக் ஹூடா தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தி நன்றாக விளையாடி வந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. இந்த டி20 தொடரில் அவர் நிச்சயம் விளையாடி இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : காமன்வெல்த் கேம்ஸ் 2022 : வாழ்வா – சாவா போட்டியில் பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்திய சிங்கப்பெண்கள், முழுவிவரம்

என்னை பொறுத்தவரை முதல் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்காமல் இருந்தாலும் இரண்டாவது போட்டியில் நிச்சயம் ஷ்ரேயாஸ் அல்லது சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கு பதிலாக தீபக் ஹூடா விளையாடுவதே சரியானதாக இருக்கும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்தார்.

Advertisement