இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரினை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி அவர்களது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை விடுத்து விட்டு ஆன்ட்ரே ரசல், சுனில் நரேன், ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோரை தக்க வைத்திருந்தது.
எனக்கு அந்த பதவி மீது ஆசை உள்ளது :
மேலும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அந்த அணி அதிக தொகையாக 23 கோடியே 75 லட்ச ரூபாய் கொடுத்து வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுத்தது. அவரை தவிர்த்து வேறுயெந்த வீரையும் அவர்கள் பெரிய தொகைக்கு வாங்கவில்லை. இதன் காரணமாக வெங்கடேஷ் ஐயர் தான் அந்த அணியின் கேப்டனாக செயல்படுவாரோ என்ற கருத்துக்களும் எழுந்தன.
ஆனால் அடிப்படை தொகைக்கு கொல்கத்தா அணி ரஹானேவையும் வாங்கியுள்ளதால் ஐபிஎல் தொடரில் கேப்டன்சி அனுபவம் வாய்ந்த அவர்தான் கொல்கத்தா அணியின் அடுத்த ஆண்டு கேப்டனாக இருப்பார் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக தான் கேப்டனாக செயல்பட விரும்புவதாகும், அப்படி கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றாலும் எந்த ரோல் கிடைத்தாலும் அதனை செய்ய தயாராக இருப்பதாகவும் வெங்கடேஷ் ஐயர் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : மத்திய பிரதேச அணியாக இருந்தாலும் சரி, ஐபிஎல் அணியாக இருந்தாலும் சரி, இந்திய அணியாக இருந்தாலும் சரி ஒரு தலைவனாக இருக்கும் போது பல அறிவுரைகளை சொல்லி அணியை வழிநடத்த முடியும். அதன் காரணமாக நான் எப்போதுமே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நினைப்பேன். இதற்கு கேப்டன் பதவி என்பது தேவையில்லை ஒரு டிரெஸ்ஸிங் ரூமில் தலைவராக இருந்தாலே போதும். கே கே ஆர் அணியின் கேப்டன் பதவி எனக்கு கிடைத்தால் நிச்சயம் அது மிகப்பெரிய பெருமை தான்.
ஆனாலும் எதிர்காலம் என நினைக்கிறது என்பதை பொறுமையாக பார்ப்போம். என்னை பொறுத்தவரை அணியின் வெற்றிக்காக என்னுடைய ஆலோசனைகளை முன் நின்று வழங்க வேண்டும் என்ற கருத்து என்னிடம் இருக்கிறது. முன்பை விட தற்போது பணத்தில் மிகப்பெரிய மாற்றம் கிடைத்திருக்கிறது. எதிர்காலம் என்னவாக அமையப் போகிறது என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க : இதை மட்டும் செய்ஞ்சா போதும்.. ரோஹித் சர்மா கேப்டன்சியில் அசத்துவார் – புஜாரா நம்பிக்கை
இவ்வளவு பெரிய தொகை கிடைத்திருப்பதால் நெருக்கடி இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன். ஏனெனில் சமூக வலைதளம் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் நாம் வாழ்கின்றோம். எனவே வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அணியில் என்ன ரோல் கிடைக்கிறதோ அதனை சரியாக செய்ய முயற்சிப்பேன் என வெங்கடேஷ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



