ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விலகியதன் காரணமாக முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ட்ப்ரீத் பும்ரா இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி 295 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்று வரலாறு நிகழ்த்தினார். இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
ரோஹித் சர்மா இதை செய்தால் போதும் :
ஆனால் அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக இணைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சரிந்தது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்வதிலும் இந்திய அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதன் காரணமாக ரோகித் சர்மாவின் கேப்டன்சி மீதான விமர்சனமும் பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதோடு ரோகித் சர்மாவின் கேப்டன்சி சரியில்லை என்றும் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து சமீபத்தில் ஓரம் கட்டப்பட்ட புஜாரா தற்போது வர்ணனையாளராக மாறியிருக்கும் வேலையில் ரோகித் சர்மா என்ன செய்தால் அவரது கேப்டன்சி மீண்டும் சிறப்பாக இருக்கும் என்பது குறித்த சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவின் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் சற்று சறுக்களை சந்தித்துள்ளது.
எனவே மீண்டும் அவர் ரன் குவிக்க துவங்கிவிட்டால் அவரது கேப்டன்சியும் மிகச் சிறப்பாக இருக்கும். ஏனெனில் ரோகித் சர்மா முதலில் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும். அவ்வாறு அவர் பார்மை மீட்டெடுத்து ரன்களை குவிக்கும் பட்சத்தில் கேப்டன்சியிலும் நல்ல மாற்றம் இருக்கும். ஒரு கேப்டன் பார்ம் அவுட் ஆகிவிட்டால் அவரது கேப்டன்சியிலும் நிச்சயம் அந்த தாக்கம் இருக்கும்.
இதையும் படிங்க : முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் மோதல் குறித்து 2 அணிகளின் கேப்டன்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
ரோஹித் எப்போது எல்லாம் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறாரோ அப்போதெல்லாம் கேப்டன்சியிலும் அசத்தியிருக்கிறார். எனவே தற்போதைய நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் என்பது முக்கியம். அனுபவ வீரரான அவர் நிச்சயம் இதை விரைவில் உணர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியையும் வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என புஜாரா கூறியது குறிப்பிடத்தக்கது.



