முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் மோதல் குறித்து 2 அணிகளின் கேப்டன்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

Rohit-and-Cummins
- Advertisement -

கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது போட்டியின் மூன்றாம் நாளான நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தற்போது இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது.

ரோஹித் மற்றும் கம்மின்ஸ் கருத்து :

இந்த போட்டியில் இந்திய அணி தோற்றத்தை விட இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகம்மது சிராஜ் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் ஆகியோர் களத்தில் வார்த்தை போரில் ஈடுபட்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

- Advertisement -

டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்திய முகமது சிராஜ் அதனை ஆவேசமாக கொண்டாடியிருந்தார். அப்போது சிராஜ் மற்றும் ஹெட் ஆகியோர்களுக்கு இடையே பெரியளவில் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவருமே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகியது.

அதோடு இருவருமே நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த தங்களது கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து ரோகித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

ஆக்ரோஷமாக செயல்படுவது என்பதற்கும், அதிகப்படியான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவத்துக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. அணியின் கேப்டனாக அதனை யாரும் கடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே என்னுடைய வேலை. முகமது சிராஜிக்கு அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். அவர் அணிக்கு தேவையான விஷயங்கள் அனைத்தையும் அவர் செய்வார்.

இதையும் படிங்க : பும்ரா நிச்சயம் இந்த விஷயத்தை பத்தி கொஞ்சம் யோசிக்கனும்.. சுனில் கவாஸ்கர் அறிவுரை – விவரம் இதோ

இது போன்ற போட்டிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் ஒன்று தான் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து கம்மின்ஸ் கூறுகையில் : டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன். அனுபவம் வாய்ந்த வீரரான அவர் களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற புரிதல் உடையவர். ஒரு கேப்டனாக இந்த சம்பவத்தில் என்னுடைய தலையீடு தேவைப்பட்டால் நிச்சயம் அதில் தலையிடுவேன் என கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement