பும்ரா நிச்சயம் இந்த விஷயத்தை பத்தி கொஞ்சம் யோசிக்கனும்.. சுனில் கவாஸ்கர் அறிவுரை – விவரம் இதோ

Bumrah-and-Gavskar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் சமநிலை வகிக்கின்றன. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள 3 போட்டிகளின் முடிவில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ளது.

பும்ரா கொஞ்சம் யோசிச்சி செயல்படனும் :

அதோடு இந்த தொடரின் எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் என்பதால் இனி வரும் போட்டிகள் இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டிகளாக மாறியுள்ளன.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறவேண்டுமெனில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அது சாத்தியம் என்று தெரிகிறது. ஏனெனில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மைதானங்களில் பும்ரா மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முதல் போட்டியின் போது அவரது செயல்பாடு காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இவ்வேளையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சற்று தொய்வினை சந்தித்திருந்தது. இந்நிலையில் எதிர்வரும் மூன்று போட்டிகளிலும் பும்ரா தொடர்ந்து விளையாடுவாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இரண்டாவது போட்டியின் போது சிறிது காயத்தை சந்தித்த அவர் இனிவரும் மூன்று போட்டிகளில் சில போட்டிகளில் அவர் ஓய்வு எடுத்தாலும் ஆச்சரியத்திற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் பும்ரா எதிர்வரும் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ரா ஆஸ்திரேலியா தொடர் முழுவதும் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடும்போது பணிச்சுமை பற்றி எல்லாம் அவர் யோசிக்க கூடாது. இனி வரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறும்.

இதையும் படிங்க : நல்லவேளை பெர்த்தில் இல்ல.. அடிலெய்ட் தோல்விக்கு முழுசா ரோஹித்தின் இந்த தவறே காரணம்.. ஆகாஷ் சோப்ரா

எனவே அவருக்கு காயம் இருந்தாலே தவிர மற்றபடி ஓய்வு வழங்கக்கூடாது. இந்திய அணிக்காக முக்கிய துருப்பு சீட்டாக இருக்கும் அவர் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். பும்ரா இல்லாமல் இந்திய அணி விளையாடப்போகும் என்றால் நிச்சயம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பை குறைத்துக் கொள்ளும் என்பதனால் பும்ராவை சரியாக பயன்படுத்த வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement