- Advertisement -
உலக கிரிக்கெட்

இங்கிலாந்து வீரரின் பரிந்துரையின் பேரில் இங்கிலாந்து செல்லவிருக்கும் வெங்கடேஷ் ஐயர் – எதற்கு தெரியுமா?

கடந்த 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் அதே ஆண்டு இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2022-ஆம் ஆண்டு வரை 9 டி20 போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் குவித்தார். அதேபோன்று இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள அவர் 2 போட்டியில் 22 ரன்கள் குவித்திருந்தார்.

ஆரம்பத்தில் பேட்ஸ்மனாக இருப்பது மட்டுமின்றி மித வேகப்பந்து வீச்சாளராக இருந்ததால் ஹார்டிக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பெற்றார். ஆனாலும் தொடர்ந்து தனது மோசமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதன் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படாமல் இருந்து வருகிறார். ஆனாலும் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றுவதில் மிக முக்கிய பங்கு வகித்தார்.

இதன் காரணமாக மீண்டும் அவர் இந்திய அணிக்காக திரும்பவும் கம்பேக் கொடுக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது கொல்கத்தா அணியின் துவக்க வீரரான பிலிப்ஸ் சால்ட்டின் பரிந்துரையின் பெயரில் தற்போது இங்கிலாந்தில் உள்ள லங்காஷயர் கவுண்டி அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி உள்ளார்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்த பிலிப் சால்ட் அவரை கவுண்டி கிரிக்கெட்டில் அறிமுகமாகும்படி ஆதரவு கூறியதோடு சேர்த்து தற்போது கவுண்டி அணியிலும் பரிந்துரை செய்ததன் காரணமாக வெங்கடேஷ் ஐயருக்கு இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.

இதையும் படிங்க : இலங்கை மண்ணில் சஞ்சு சாம்சனுக்கு எதிராக இருக்கும் சவால்.. அந்த பவுலரை சமாளிப்பது அவருக்கு கஷ்டமாம் – விவரம் இதோ

கடந்த சில ஆண்டுகளாகவே வெறும் பேட்ஸ்மேனாக திகழ்ந்துவரும் வெங்கடேஷ் ஐயர் மீண்டும் வேகப்பந்து வீச்சில் கவனம் செலுத்தும் பட்சத்தில் நிச்சயம் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட வெங்கடேஷ் ஐயர் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் இணைந்து விளையாட ஆயுத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -