கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி ஷ்ரேயாஸ் ஐயரை கழட்டிவிட்டதால் அவர் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியால் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்.
எனக்கு அந்த பதவி கிடைத்தால் மகிழ்ச்சி : வெங்கடேஷ் ஐயர்
இதன் காரணமாக எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா அணியில் கேப்டன் மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரானது வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்க இருக்கிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்களது அணியின் கேப்டன்களை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டன.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக அந்த அணியை சேர்ந்த சீனியர் வீரரான ரஹானே அல்லது இளம் அதிர வீரரான வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவருக்கு கேப்டன்சி வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் இளம் நட்சத்திர வீரரான வெங்கடேஷ் ஐயர் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டால் தன்னால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கொல்கத்தா அணியை கேப்டனாக வழி நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிச்சயம் அதை இரு கரங்கள் கொண்டு ஏற்றுக்கொள்வேன். மேலும் நான் கேப்டனாக இருக்கவும் தயாராக இருக்கிறேன். எனக்கு தலைமை பண்பில் நம்பிக்கை இருக்கிறது. ஒரு கேப்டனாக முன் நின்று அணியை வழிநடத்துவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அந்த பொறுப்பை ஏற்று வழிநடத்துவதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை.
இதையும் படிங்க : இதெல்லம் கொஞ்சம் கூட நியமில்லை.. இப்படி பண்ணா இந்தியா ஜெயிக்க தான் சேன்ஸ் அதிகம் – கம்மின்ஸ் குற்றச்சாட்டு
எனக்கு ஒருவேளை கொல்கத்தா அணியின் கேப்டன் பதவி கிடைத்தால் நிச்சயம் அதனை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவேன் என்று வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் 50 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1326 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



