நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கி ஒரு வாரத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவடையவுள்ள வேளையில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இதன் காரணமாக குரூப் பி பிரிவிலிருந்து வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறுகின்றன.
இந்திய அணிக்கு சாதகமா எல்லாம் நடக்குது : பேட் கம்மின்ஸ்
அதே வேளையில் குரூப் பி பிரிவில் எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறும் என்பது இன்றைய போட்டியின் முடிவில் தெரிந்து விடும் என்பதால் இந்து தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதோடு சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த அணி அடைந்த படுதோல்வி பலரது மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஏற்கனவே அட்டவணையை வெளியிட்டு அந்த வகையில் இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாயில் மட்டுமே விளையாடி வருகிறது.
அப்படி இந்திய அணி துபாயில் மட்டுமே விளையாடி வருவது மேலும் கூடுதல் சாதகத்தை இந்திய அணிக்கு அளித்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குற்றச்சாட்டு ஒன்றினை முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்திய அணி தொடர்ந்து ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு பெரிய சாதகமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : அடிச்சி சொல்றேன்.. இப்போ இருக்குற பாகிஸ்தான் அணியால் இதை கூட செய்ய முடியாது – கவாஸ்கர் தடாலடி
தற்போதுள்ள இந்திய அணி நல்ல பலம் வாய்ந்த அணியாக இருந்து வரும் வேளையில் அவர்கள் ஒரே மைதானத்தில் விளையாடுவது கூடுதல் சாதகத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இப்படி ஒரே மைதானத்தில் அவர்கள் விளையாட வைக்கப்பட்டது நியாயமா? அவர்களுக்கு சாதகமான வகையில் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேட் கம்மின்ஸ் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



