ஹார்டிக் பாண்டியாவின் வருகையால் அணியில் இருந்து வெளியேற்றப்பட இருக்கும் வீரர் – யார் தெரியுமா?

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது. அதனைத் தொடர்ந்து தற்போது பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி கலந்துகொள்ள இருக்கிறது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா காயம் காரணமாக அந்த தொடரை தவறவிட்ட வேளையில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் கேப்டனாக பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

Rohith

- Advertisement -

அதன்படி பிப்ரவரி 6, 9, 11 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளிலும், பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா விளையாடுகிறார். தற்போது முழு உடல் தகுதியுடன் உள்ள அவர் பெங்களூருக்கு சென்று தனது உடற் தகுதியை நிரூபிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று ஏற்கனவே காயம் காரணமாக பந்து வீசாமல் இருந்துவந்த பாண்டியா பந்து வீசுவதற்கு தயாராக பின்னரே இந்திய அணியில் இணைவேன் என்று தற்காலிக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் பந்து வீசி வருவதால் அவரும் தனது உடற் தகுதியை நிரூபித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இணைவார் என்று தெரிகிறது.

venkatesh 1

இதன் காரணமாக இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அனுபவ வீரர்களான அஸ்வின், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் மற்றும் தமிழக வீரர் ஷாருக்கான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதே வேளையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆல்-ரவுண்டராக இடம் பிடித்து விளையாடிய வெங்கடேஷ் ஐயர் இரண்டு போட்டிகளில் விளையாடி வெறும் 24 ரன்கள் மட்டுமே குவித்ததால் அவர் ஒருநாள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா அணியில் இடம் பிடிப்பார் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : எங்க நாட்டுக்கு வாங்க. செலவு கம்மியா ஐ.பி.எல் நடத்திட்டு போங்க – பி.சி.சி.ஐ க்கு அழைப்பு விடுத்த நாடு

அண்மையில் இந்திய அணியில் இடம் பிடித்த ஒருசில போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவரை மீண்டும் அணியில் இருந்து வெளியேற்ற இருப்பது அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement