எங்க நாட்டுக்கு வாங்க. செலவு கம்மியா ஐ.பி.எல் நடத்திட்டு போங்க – பி.சி.சி.ஐ க்கு அழைப்பு விடுத்த நாடு

IPL-1
- Advertisement -

நடப்பு 2022-ஆம் ஆண்டிற்கான 15-வது ஐபிஎல் சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்கி மே மாதம் கடைசி வரை நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார். இதன் காரணமாக தற்போது இந்த ஐபிஎல் தொடருக்கான இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி மாதம் 12,13 ஆகிய தேதிகளில் மெகா ஏலம் நடைபெற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டால் அடுத்து உடனடியாக போட்டி அட்டவணையும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் பெருகிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக போட்டிகளை இங்கு நடத்துவதில் குழப்பம் நீடித்து வருகிறது.

IPL
IPL Cup

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் அங்கு போட்டிகளை நடத்துவதில் செலவு அதிகமாகும் என்பதால் பிசிசிஐ இம்முறை இந்தியாவிலேயே போட்டியை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.

- Advertisement -

ஆனால் தற்போது எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி கொண்டால் உங்களுக்கு செலவு மிச்சமாகும் என்று பிசிசிஐ-க்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியது.

Bhuvi-1

இந்நிலையில் இந்த தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோருக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்தது மேலும் அவர்களுடன் ஏற்பட்ட கூட்டத்தில் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளிலும் இங்கு நடத்திக் கொள்ளுங்கள் என்று தென் ஆப்பிரிக்கா வாரியம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தை விட இங்கு போட்டிகளை நடத்தி கொண்டால் உங்களுக்கு செலவு குறைவு என்று அந்நாட்டு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. குறைந்த விமான பயணம் அதுமட்டுமின்றி சிறிய இடைவெளியில் உள்ள மைதானங்கள் என குறிப்பிட்ட சில முக்கியமான அம்சங்களுக்கு வழி கொடுத்து தென்னாப்பிரிக்கா இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : வேற லெவல் திறமை : ஐபிஎல் 2022 ஏலத்தில் குறைந்த விலைக்கு வந்து கோடிகளில் செல்லப்போகும் – 2 இளம் வீரர்கள்

அதன்படி ஜோகனஸ்பர்க் சுற்றியுள்ள நான்கு மைதானங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான திட்டத்தையும் அவர்கள் கூறியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், இது தொடர்பான முடிவு குறித்து பி.சி.சி.ஐ யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement