எல்லாமே சரியா தான் பண்ணீங்க.. ஆனா கே.கே.ஆர் செய்த தப்பு இதுதான் – சுட்டிக்காட்டிய ரசிகர்கள்

KKR
- Advertisement -

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தேதிகளில் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பத்து அணிகளும் பங்கேற்று தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கியதால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது.

கொல்கத்தா அணி செய்த தவறு :

இந்நிலையில் நடைபெற்று முடிந்த இந்த மெகா ஏலத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தாங்கள் ஏற்கனவே தக்கவைத்த ஆறு வீரர்களுடன் சேர்த்து தற்போது மேலும் பல வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்தி உள்ளது. ஆனாலும் அந்த அணியின் கேப்டன் யார் என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியின் கேப்டனாக முன்னின்று வழிநடத்தி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்த கே.கே.ஆர் நிர்வாகம் ரிங்கு சிங், சுனில் நரேன், ரசல், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் ரமன்தீப் சிங்கை தக்க வைத்தது.

அவர்களை தவிர்த்து தற்போது ஏலத்தில் மிகப்பெரிய மதிப்பில் அதாவது 23 கோடியே 75 லட்ச ரூபாய் கொடுத்து வெங்கடேஷ் ஐயரை அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதுதான் கொல்கத்தா அணி செய்த மிகப்பெரிய தவறு என்று ரசிகர்கள் சுட்டி காண்பித்துள்ளனர். ஏனெனில் ஏற்கனவே தக்க வைத்த ஆறு வீரர்களில் யாராவது ஒருவருக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயரை அவர்கள் எளிதாக தக்க வைத்திருக்கலாம்.

- Advertisement -

அப்படி அவர் தக்க வைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இவ்வளவு பெரிய தொகையை வெங்கடேஷ் ஐயருக்காக செலவழிக்க தேவை இருந்திருக்காது. அதோடு ஒரு கேப்டன்சி வீரருக்காக மிகப்பெரிய தொகைக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் போட்டி போட்டிருக்க முடியும். இதன் காரணமாக வெங்கடேஷ் ஐயர் விவகாரத்தில் கொல்கத்தா அணி தவறு செய்து விட்டதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : தோனியின் வழியில் 2 புதுமுக வீரர்களும் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த கே.எல் ராகுல் – சுவாரசிய தகவல்

வெங்கடேஷ் ஐயரை தக்கவைத்து ஏலத்தில் வேறு ஒரு கேப்டன் வீரருக்கான பெரிய போட்டிக்கு அந்த அணியில் சென்றிருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ரசிகர்கள் கூறுவது போலவே தற்போது தேர்வாகியுள்ள கொல்கத்தா அணியில் கேப்டன் யார்? என்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement