Vaughan : ஐ.பி.எல் தொடரிலிருந்து கோலி உடனடியாக விலகவேண்டும். காரணம் இதுதான் – வாகன்

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் டி20 போட்டித்தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது கால்வாசி போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி சிறப்பாக விளையாடி

Vaughan
- Advertisement -

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் டி20 போட்டித்தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது கால்வாசி போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

Ipl cup

- Advertisement -

ஆனால், கோலி தலைமையிலான பெங்களூரு அணி விளையாடிய 6 போட்டிகளும் தோல்வி அடைந்து கிடைத்ததா பிளேஅப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது என்றே கூறவேண்டும்.

இதனால் கோலி பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டும் என்றும், கேப்டன் பதவிக்கு டிவில்லியர்ஸ் வரவேண்டும் என்றும் பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Kohli

அதன்படி அவர் கூறியதாவது : ஐ.பி.எல் தொடரின் பாதியில் இருந்து கோலி வெளியேற வேண்டும். இல்லையெனில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு ஓய்வு அளிக்கவேண்டும். ஏனெனில் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ள இந்தநிலையில் கோலி தலைமையிலான அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால் அவருக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்படும்.

- Advertisement -

Kohli 1

மேலும், தொடர்ச்சியாக ஆடிவரும் கோலி சில வாரங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் தான் பெரிய தொடரான உலகக்கோப்பை தொடரில் பிரகாசிக்க முடியும். இல்லையென்றால் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அதுவே மிகப்பெரிய இழப்பாகவும் அமைய வாய்ப்பிருக்கும் என்று வாகன் கூறினார்.

kohli

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த இரண்டு அணிகளுக்கும் கோப்பையை வெல்ல கடும் போட்டி நிலவும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement