ஆஸியை அவர்களது சொந்தமண்ணில் வீழ்த்த இந்த அணியால் மட்டுமே முடியும் – மைக்கல் வான் பேட்டி

Vaughan
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. மேலும் தடையில் இருந்து மீண்ட வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியதும் மீண்டும் ஆஸ்திரேலிய அணி தனது வெற்றிப் பாதைக்கு திரும்பி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Aus

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான மைக்கேல் வான் ஆஸ்திரேலிய அணி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஆஸ்திரேலியாவில் தற்போது அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் அவர்களை ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்த முடியாது என்ற உத்வேகத்தில் அவர்கள் இருந்து வருகின்றனர்.

ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்க வேண்டும் என்றால் அது இப்போது உள்ள இந்திய அணியால் நிச்சயம் முடியும். விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அனைத்து உத்திகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே தற்போது இந்திய அணி ஒரு வலுவான அணியாக திகழ்கிறது.

Ind-1

இந்திய அணியின் பந்துவீச்சு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது சிறப்பாக உள்ளதால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணியை அவர்களது மண்ணில் விழ்த்த இந்திய அணிக்கு எளிமையான வாய்ப்பு உள்ளது என்று மைக்கல் வான் கூறினார். ஏற்கனவே கடந்த முறை ஆஸ்திரேலியா சென்று இருந்த போது இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் மற்றும் ஸ்மித் ஆகியோர் இல்லாததால் எளிதில் இந்திய அணி வெற்றி பெற்றது எனவும் அவர்கள் இருவரும் இருந்தால் இந்திய அணிக்கு சவாலாக இருந்திருக்கும் என்றும் பலரும் கூறி வந்தனர்.

ind 1

ஆனால் தற்போது இருக்கும் இந்திய அணியின் பலத்தை பார்க்கும் பொழுது அவர்கள் இருவரும் இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தும் அளவிற்கு பலமாக உள்ளது என்பதே உண்மை. இருப்பினும் அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர் வந்தால் அப்போது யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்த்தால் தெரியும் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement