கொரோனா நெகட்டிவ் ஆகியும் எனக்கு இன்னும் இந்த பிரச்சனை இருக்கு. பிராக்டீஸ் பண்ண முடியல – வருண் சக்ரவர்த்தி வருத்தம்

Varun
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரின் முதல் கட்டப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் போட்டிகள் ஆரம்பிக்கும் வேளையில் கொல்கத்தா அணியை சேர்ந்த தமிழக வீரரான வருன் சக்ரவர்த்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து மற்றொரு வீரரான சந்தீப் வாரியாரும் பாதிக்கப்பட அந்த போட்டி நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த ஐ.பி.எல் தொடரையும் பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக ஒத்திவைத்தது.

sandeep

- Advertisement -

வருன் சக்ரவர்த்தி கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்கேன் எடுப்பதற்காக பயோ பபுளை விட்டு வெளியே சென்று வந்ததால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்ற தகவலும் அப்போது வெளியானது. இந்நிலையில் தற்போது தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து பேசிய வருண் சக்ரவர்த்தி கூறுகையில் : மே 1ஆம் தேதி அன்று எனக்கு லேசான காய்ச்சல், உடல்சோர்வு இருந்தது. அதனால் நான் அன்றைய பயிற்சியில் ஈடுபட வில்லை. மேலும் இந்த தகவலை உடனடியாக நிர்வாகத்திடம் கூறி RT – PCR சோதனைக்கு ஏற்பாடு செய்தேன்.

அப்போது எனக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. மேலும் எனது உறவினர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் மனதளவில் கவலை அடைந்தேன். 12 நாட்கள் ஹோட்டல் அறையில் தனிமையில் இருந்த எனக்கு தினமும் சரியான நேரத்தில் மருந்துகள் மற்றும் உணவு கொடுக்கப்பட்டது. தினமும் காலை 9 மணிக்கு லேட்டாகத்தான் எழுந்தேன். மதியம் மருந்துகளை சாப்பிட்டு சாயந்திரம் வீடியோ காலில் என் குடும்பத்துடன் பேசுவேன்.

varun 1

வீட்டில் இருந்த எனது குடும்பத்தினர் பதட்டம் அடையாமல் என்னுடைய இந்த சூழலை கையாண்டார்கள். கொல்கத்தா நிர்வாகமும் எனக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. எனக்காக ஒரு ஊழியரை என்னை கவனிப்பதற்காக நியமித்திருந்தனர். அதன்பிறகு சிகிச்சை எல்லாம் முடித்து இரண்டு முறை நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்த பிறகு என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். அணியின் உரிமையாளரான ஷாருக்கான் எனக்கு மட்டுமின்றி அனைத்து வீரர்களுக்கும் போன் செய்து நம்பிக்கை அளித்தார்.

கொரோனாவில் இருந்து நான் மீண்டும் தற்போது சென்னைக்கு வந்து என்னால் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. எனக்கு இன்னும் உடல் சோர்வு இருக்கிறது. அதே போன்று அடிக்கடி வாசனை மற்றும் ருசி இழப்பு ஆகியவை ஏற்படுகிறது. அதனால் என்னால் பயிற்சியிலும் ஈடுபட முடியவில்லை கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான் நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் இரண்டு வாரங்களுக்கு வெளியே செல்ல வேண்டாம். மாஸ்க் அணிந்தபடி இருங்கள். உயரிய சிகிச்சை இருந்ததால் நான் நல்லபடியாக வந்து விட்டேன். ஆனால் பலர் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது எனக்கு கவலையாக இருக்கிறது என வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement