இந்த ஐ.பி.எல் தொடரில் நான் வீழ்த்த நினைக்கும் பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்.. பட்டியலிட்ட வருண் சக்ரவர்த்தி

Varun
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அந்த தொடரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி திகழ்ந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே கொல்கத்தா அணிக்காக மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரிலும் அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.

இந்த ஆண்டு நான் வீழ்த்த நினைக்கும் பேட்ஸ்மேன்கள் : வருண் சக்ரவர்த்தி

மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரானது தற்போது முதல் வாரத்தை நிறைவு செய்துள்ள வேளையில் இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக கலந்து கொண்ட கொல்கத்தா அணி தங்களது முதல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று மார்ச் 31-ஆம் தேதி நடைபெற இருக்கும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரரான வருண் சக்கரவர்த்தி இந்த ஐபிஎல் தொடரில் தான் வீழ்த்த நினைக்கும் பேட்ஸ்மேன்கள் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வருண் சக்கரவர்த்தி கூறியதாவது : இந்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் நான் சிறப்பான ஃபார்மில் இருக்கும் தரமான பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்த நினைக்கிறேன்.

- Advertisement -

குறிப்பாக ஹென்றிச் கிளாஸன், நிக்கலஸ் பூரான், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினால் மகிழ்ச்சி அடைவேன். ஏனெனில் இவர்கள் அனைவருமே நட்சத்திர வீரர்கள் அவர்களது விக்கெட்டை எடுக்க முடிந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு ஏதும் கிடையாது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : என்ன ஆனாலும் சரி.. நாங்க இப்படித்தான் ஆடுவோம்.. அதுல மாற்றமே இல்ல – சன் ரைசர்ஸ் கோச் அதிரடி பேட்டி

அவரது இந்த பதிலானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வருண் சக்ரவர்த்தி கடந்த ஆண்டு இந்திய அணிக்காக மீண்டும் கம்பேக் கொடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement