- Advertisement -
ஐ.பி.எல்

பவுலர்ஸ் என்றாலே ஏமாளியா? இதை மாத்துங்க.. அவங்க தவறுக்கு நாங்க தான் கிடைச்சோமா? வருண் கோரிக்கை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி மும்பையில் 33வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியை மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 20 ஓவரில் 162/5 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை அணி 18.1 ஓவரிலேயே 166/6 ரன்கள் எடுத்து தங்களுடைய 3வது வெற்றியைப் பெற்று அசத்தியது.

முன்னதாக அந்தப் போட்டியில் 7வது ஓவரில் மும்பை அணியின் துவக்க வீரர் ரியான் ரிக்கல்ட்டன் 21 ரன்கள் எடுத்திருந்த போது ஜீசன் அன்சாரி சுழலில் ஸ்டம்ப்பிங் முறையில் விக்கெட்டை இழந்தார். களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்ததால் ரிக்கல்டன் பெவிலியன் நோக்கி சென்றார். ஆனால் அதை மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று சொல்லி நோபால் வழங்கினார்.

- Advertisement -

பவுலர்கள் ஏமாளியா:

குறிப்பாக ஹைதராபாத் விக்கெட் கீப்பர் ஹென்றிச் க்ளாஸென் ஸ்டம்ப்புகளுக்கு சிறிது முன்பாக தம்முடைய கையைக் கொண்டு வந்து பந்தைப் பிடித்து ஸ்டம்பிங் செய்தார். ஆனால் விதிமுறைப்படி பந்து ஸ்டம்பை தாண்டிய பின்பு தான் அதைப் பிடித்து பெய்ல்ஸை நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஸ்டம்பிங் முறையில் நடுவர் விக்கெட் கொடுப்பார்.

இருப்பினும் க்ளாஸென் அதை சரியாக செய்யத் தவறியதால் தப்பிய ரிக்கல்டன் தொடர்ந்து பேட்டிங் செய்து 31 ரன்கள் அடித்தது ஹைதராபாத் வெற்றி பறிபோவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில் அந்த இடத்தில் விக்கெட் கீப்பர் தான் தவறு செய்ததாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு தண்டனையாக பவுலருக்கு விக்கெட் வழங்க மறுக்கப்படுவதுடன் நோ பால் வழங்கப்படுவதாகவும் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

- Advertisement -

வருண் கேள்வி:

அப்படி கீப்பர் செய்யும் தவறுக்கு பவுலரை தண்டிப்பது நியாயமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே பவுலர்கள் என்றால் ஏமாளி என்பது போல் நிறைய விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த விதிமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் வருண் சக்கரவர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: எந்த ஆர்சிபி பேட்ஸ்மேனுக்கும் இந்த காமன் சென்ஸ் கூட இல்லை? கேப்டன் அதுக்கு மேல.. சேவாக் விளாசல்

இது பற்றி ட்விட்டரில் (எக்ஸ்) அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு பின்வருமாறு. “ஸ்டம்ப்புகளுக்கு முன்பாக கீப்பரின் கை வந்தால் அது டெட் (காலாவதி) பாலாக அறிவிக்கப்பட வேண்டும் மற்றும் விக்கெட் கீப்பருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் அதே தவறை கீப்பர் மீண்டும் செய்ய மாட்டார். அதை விட்டுவிட்டு நோபால் மற்றும் ஃபிரீ ஹிட் வழங்கக்கூடாது. அதற்கு பவுலர் என்ன செய்வார்? இதைப் பற்றி சத்தமாக சிந்தியுங்கள். அனைவரும் என்ன நினைக்கிறீர்கள்?” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -