
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதல் நான்கு ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
அதேவேளையில் ஆஸ்திரேலியா அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் அவர்களுக்கும் இது மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்றைய ஐந்தாவது போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி ஒரு மாபெரும் சாதனைக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக 28 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் அவர் இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவின் ஆல் டைம் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். குல்தீப் யாதவ் தனது 30-ஆவது போட்டியில் விளையாடும் போது 50 விக்கெட்டுகளை டி20 போட்டிகளில் வீழ்த்தி இருந்தார்.
இதுவே இந்திய வீரர் ஒருவர் விரைவாக டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாக இருந்து வருகிறது. தற்போது வரை 49 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 88 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே வேளையில் இன்றைய 29-வது ஆட்டத்தில் விளையாட இருக்கும் வருண் சக்கரவர்த்தி இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் 29 போட்டியிலே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக 50 விக்கெட்டுகளை டி20 போட்டிகளில் வீழ்த்திய இந்திய வீரராக சாதனை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் இப்படி ஆடுறதுதான் இந்திய அணிக்கு பெரிய ஸ்ட்ரென்த் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
ஒருவேளை அவர் இந்த போட்டியில் அந்த சாதனையை நிகழ்த்த முடியாமல் அடுத்த போட்டி வரை செல்லும் பட்சத்தில் 30 போட்டிகளுடன் குல்தீப் யாதவுடன் அந்த சாதனையை சமன் செய்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.