சூரியகுமார் யாதவ் இப்படி ஆடுறதுதான் இந்திய அணிக்கு பெரிய ஸ்ட்ரென்த் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

Ashwin and SKY
- Advertisement -

கடந்தாண்டு நடைபெற்று முடிந்த 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அந்த தொடர் முடிந்த கையோடு கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டதால் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

சூரியகுமார் யாதவ் இப்படி ஆடுறது தான் இந்திய அணிக்கு நல்லது : ரவிச்சந்திரன் அஷ்வின்

இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணியே கைப்பற்றும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியும் மிகச் சிறப்பான ஆட்டத்தை டி20 போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கலந்த இந்திய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் கோப்பையை தக்க வைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் தற்போது ஃபார்ம் இன்றி விளையாடி வரும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் ஃபார்முக்கு திரும்பி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் எந்த அணி கைப்பற்ற விரும்பினாலும் அவர்களுக்கு இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன.

ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு எதிராக அவர்கள் சிறப்பாக விளையாடியாக வேண்டும். அதற்கடுத்து வருண் சக்கரவர்த்தியின் சுழலையும் தாக்குபிடித்தாக வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பொறுத்தவரை அபிஷேக் ஷர்மா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் அடுத்த உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவார் என்று நம்புகிறேன்.

- Advertisement -

அதேபோன்று தற்போது பார்மின்றி விளையாடும் சூரியகுமார் யாதவ் நிச்சயம் அடுத்த உலக கோப்பை தொடரில் அசத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதோடு அவரது அதிரடியை அந்த தொடரிலும் வெளிப்படுத்துவார். சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டம் தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம். ஏனெனில் அவர் 10 பந்துகளை சந்தித்து 20 ரன்களை அடிக்கும் பட்சத்தில் 200 ஸ்டைக் ரேட்டுடன் விளையாடுவார்.

இதையும் படிங்க : இன்னும் 4 ரன்கள் போதும்.. சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – திலக் வர்மா

துவக்கத்தில் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதன்பிறகு சூரியகுமார் யாதவ் 10 பந்துகளில் 20 ரன்கள் அடிக்கும் போது இந்திய அணியின் ரன்குவிப்பு வேகம் அதிகரிக்கும் அதுதான் அணிக்கும் நல்லது. எனவே சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து அதிரடியாக விளையாடுவது தான் நமது அணியின் பலம் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement