இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நவம்பர் 8-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் இளம் வீரரான திலக் வர்மா சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிறந்த நாளன்று சாதனை நிகழ்த்த காத்திருக்கும் திலக் வர்மா :
அந்த வகையில் இன்று நடைபெற இருக்கும் இந்த ஐந்தாவது போட்டியில் திலக் வர்மா நான்கு ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அந்த சாதனையை நிகழ்த்தி வரலாறு படைப்பார் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் திலக் வர்மா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
கடந்த 2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அறிமுகமாகிய திலக் வர்மா இதுவரை இந்திய அணிக்காக 36 டி20 போட்டிகளில் விளையாடி 33 இன்னிங்ஸ்களில் 996 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதம் மற்றும் 4 அரை சதங்கள் அடங்கும். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் ஐந்தாவது போட்டியில் அவர் மேலும் 4 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்த 12-ஆவது வீரராக இடம் பிடிப்பார்.
அதுமட்டுமின்றி மிக இளம் வயதில் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்துவார். இதற்கு முன்னதாக இந்திய அணி சார்பாக விராட் கோலி கடந்த 2015-ஆம் ஆண்டு தனது 26 வயது 331 நாட்களில் 1000 ரன்களை கடந்திருந்தார். இதுவே இந்திய வீரர் ஒருவர் குறைந்த வயதில் அடிக்கப்பட்ட 1000 ரன்களாக இருந்தது.
அதற்கடுத்து கே.எல் ராகுல் தனது 27 வயதில் 1000 ரன்களை பூர்த்தி செய்திருந்தார். இந்நிலையில் இன்று நவம்பர் 8-ஆம் தேதி தனது 23-ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் திலக் வர்மா இன்றைய போட்டியில் 4 ரன்கள் அடிக்கும் பட்சத்தி ல் தனது பிறந்த நாளன்றே 1000 ரன்களை பூர்த்தி செய்ததோடு மட்டுமின்றி 23 வயதில் அதாவது குறைந்த வயதில் இந்திய அணிக்காக 100 ரன்களை சர்வதேச டி20 போட்டிகளில் அடித்த வீரராக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விராட் கோலி அவங்க சப்போர்ட்ல வளந்தவர்.. ஆனா பாபர் அசாம் தனியாளா வந்தவர்.. அசாம் கான்
ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்த டி20 தொடர் இன்று முடிவடையும் கையோடு அடுத்தாக திலக் வர்மா இந்திய ஏ அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க ஏ அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.



