விராட் கோலி அவங்க சப்போர்ட்ல வளந்தவர்.. ஆனா பாபர் அசாம் தனியாளா வந்தவர்.. அசாம் கான்

Azam Khan
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் அறிமுகமான காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் இந்தியாவின் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று அந்நாட்டவர்கள் தலையில் வைத்து கொண்டாடினர். அத்துடன் பாகிஸ்தான் வாரியம் அவருக்கு 3 வகையான அணியிலும் கேப்டனாக செயல்படும் வாய்ப்பைக் கொடுத்தது.

அந்த வாய்ப்பில் பேட்ஸ்மேனாக பாபர் அசாம் பெரிய ரன்கள் அடிக்க தடுமாறினார். அதே போல கேப்டனாகவும் தடுமாற்றமாகவே செயல்பட்ட அவரது தலைமையில் ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்பே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் அவமானத் தோல்விகளை சந்தித்தது. அதனால் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம் தற்போது சாதாரண பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

உதவியாளர் வளர்ந்த கோலி:

இருப்பினும் 2023 ஆசியக் கோப்பைக்குப் பின் இரண்டரை வருடங்களாக சதமடிக்க முடியாமல் திண்டாடி வரும் அவர் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் பாபர் அசாம் பாகிஸ்தான் பேட்டிங்கை பிரபலப்படுத்தியவர் என்று அந்நாட்டு வீரர் அசாம் கான் பாராட்டியுள்ளார். அத்துடன் விராட் கோலி வளர்வதற்கு சச்சின், தோனி போன்ற ஜாம்பவான்கள் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மறுபுறம் பாபர் அசாம் தனியாளாக வளர்ந்து வருவதாக அசாம் கான் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சால் மட்டுமே பாகிஸ்தான் புகழ் பெற்றது. ஆனால் பாபர் அசாம் தன்னுடைய பேட்டிங்கால் பாகிஸ்தானை பிரபலப்படுத்தினார். அங்கே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது”

- Advertisement -

தனியாளாக வளர்ந்த பாபர்:

“இந்தியாவுக்காக விராட் கோலி என்ன செய்தாரோ அதை பாகிஸ்தானுக்காக பாபர் அசாம் செய்து வருகிறார். விராட் கோலி தம்முடைய ஆரம்பக் காலங்களில் தம்மை சுற்றி ஜாம்பவான் வீரர்களைக் கொண்டிருந்தார். குறிப்பாக விவிஎஸ் லக்ஷ்மன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், எம்எஸ் தோனி ஆகியோர் விளையாடிய சகாப்தத்தில் விராட் கோலி விளையாடத் துவங்கினார்”

இதையும் படிங்க: எல்லாம் ஓட்ட தெரிஞ்ச சுந்தருக்கு சைக்கிள் மட்டுமே தராங்க.. இந்திய பேட்டிங் மிரட்டலாக இல்ல.. ரமேஷ் விமர்சனம்

“அவரைச் சுற்றி நிறைய பெரிய பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். ஆனால் பாபரை சுற்றி யார் இருந்தார்கள்? யாருமே இல்லை” என்று கூறினார். இருப்பினும் பாபர் அசாம் அறிமுகமான காலங்களில் மிஸ்பா, சோயப் மாலிக், யூனிஸ் கான், ஷாஹித் அப்ரிடி போன்ற தரமான வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இருந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அசாம் கான் கருத்து இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைகிறது.

Advertisement