- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறிய வருண்.. ஆல் டைம் டாப் பவுலராகவும் உலக சாதனை

சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தம்முடைய கேரியரில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் தொடரில் அசத்திய அவர் 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார்.

அப்படியே துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையிலும் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடத் தவறிய வருண் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராத அவர் தன்னுடைய பந்து வீச்சில் மாற்றங்களைச் செய்து மீண்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி 2024 கோப்பையை கொல்கத்தா வெல்ல உதவினார்.

- Advertisement -

வருண் சாதனை:

அதனால் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் மீண்டும் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து டி20 தொடர்களில் அசத்திய வருண் சக்கரவர்த்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் கடைசி நேரத்தில் துபாயில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

அந்த வாய்ப்பிலும் அபாரமாக செயல்பட்ட வருண் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வென்ற உதவினார். அதே வேகத்தில் தற்போது 2025 ஆசியக் கோப்பையிலும் அசத்தி வரும் அவர் 733 புள்ளிகளைப் பெற்று ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக 717 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்தின் ஜேக்கப் ஃடுபியை முந்தியுள்ள அவர் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

- Advertisement -

ஆல் டைம் டி20 பவுலர்:

அத்துடன் ஐசிசி ஆல் டைம் டி20 பவுலர்கள் தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளைப் (733) பெற்ற இந்திய வீரர் என்ற உலக சாதனையையும் வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். இதற்கு முன் நியூஸிலாந்தின் ஃடுபி 717 புள்ளிகளை பெற்றதே முந்தைய. இந்தியளவில் மற்றொரு ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் அதிகபட்சமாக 707 புள்ளிகளை பெற்றதே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: இன்னும் 4 சிக்ஸர் போதும்.. இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – அபிஷேக் சர்மா

மொத்தத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக விளையாடி உலக அரங்கில் இந்தியாவுக்காக பெருமை சேர்த்துள்ளார். குறிப்பாக 34 வயதில் அவர் நம்பர் ஒன் டி20 பௌலராக முன்னேறிள்ளார். அதனால் சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக வருண் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -