ஷாக்குக்கு மேல ஷாக் : கொல்கத்தா அணியை சேர்ந்த 2 தமிழக வீரர்களுக்கு கொரோனா உறுதி – யார் அந்த 2 வீரர்கள் தெரியுமா ?

KKR

இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த 13வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா விதிமுறைப்படி பயோ பபுள் வளையத்திற்குள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா சற்று அடங்கிய நிலையில் 14 வது சீசன் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

ipl

இருப்பினும் இந்த இக்கட்டான வேளையிலும் சிறப்பான முறையில் பயோ பபுள் வளையத்திற்குள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அனைத்து அணிகளும் 7 போட்டிகளில் விளையாடி முதற்கட்ட தொடரை முடித்த நிலையில் அடுத்த இரண்டாவது கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான 30 ஆவது லீக் போட்டி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கொல்கத்தா அணியை சேர்ந்த இரண்டு தமிழக வீரர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்றைய போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருக்கும் 2 தமிழக வீரர்கள் யார் யார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

sandeep

அதன்படி சுழற்பந்து வீச்சாளரான வரும் சக்கரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் வாரியர் ஆகிய இரண்டு தமிழக வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களுடன் நெருக்கமாக இருந்த மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக மேலும் சில வீரர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த தொடரில் கொல்கத்தா அணி வீரர்கள் முழுவதுமே பங்கேற்பது சிரமமாக மாறிவிடும்.

- Advertisement -

Varun

ஏற்கனவே கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் இடம்பிடித்த வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து விலகிய நிலையில் இந்த ஐ.பி.எல் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.