
தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார் என்றால் மிகையல்ல. அந்த அளவிற்கு இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி பந்துவீச்சு துறையில் பலமாக இருக்க வருண் சக்கரவர்த்தியும் உதவியிருந்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கு இடையே நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தான் அணி அதிரடியான துவக்கத்தை அளித்த வேளையில் முதல் விக்கெட்டாக பர்ஹானை 57 ரன்களில் வீழ்த்தி முதல் திருப்பு முனையை வருண் சக்கரவர்த்தி தான் ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதேபோன்று மற்றொரு துவக்க வீரரான பக்கார் சமானையும் 46 ரன்களில் வீழ்த்தி போட்டியின் சரியான நேரத்தில் மீண்டும் ஒரு திருப்புமுனை வருண் சக்கரவர்த்தி ஏற்படுத்தியிருந்தார். அதன்பின்னர் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக பந்துவீச பாகிஸ்தான அணியானது 19.1 ஓவர்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கெல்லாம் சுருண்டது.
பின்னர் 147 ரன்களை துரத்தி விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த வருண் சக்கரவர்த்தி கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி.
இந்த போட்டியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று விரும்பியே பந்து வீசினேன். அந்த வகையில் துவக்க வீரர்கள் இருவரையும் ஆட்டமிழக்க வைத்தது உண்மையிலேயே மகிழ்ச்சி. சரியான திட்டத்துடன் பந்து வீசியதால் எங்களால் அவர்களை தடுத்து நிறுத்த முடிந்தது. குறிப்பாக குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை முடக்கினார்.
இதையும் படிங்க : அவருக்கு காயம் ஏற்பட்டது ஷிவம் துபேவுக்கு ஒரு வாய்ப்பா மாறிடுச்சு.. அசத்திட்டாரு – மோர்னே மோர்கல் பாராட்டு
நாங்கள் இருவரும் மிடில் ஓவர்களில் இணைந்து பந்து வீசியதை பார்க்கையில் எனக்கு கே.கே.ஆர் அணியில் அவருடன் இணைந்து பந்துவீசிய ஞாபகம் வந்துவிட்டது. இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி என வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.