இந்த ஆசிய கோப்பை தொடரில் நம்ம பிளேயர்ஸ் நிறைய கேட்ச் விட இதுவே காரணம் – வருண் சக்ரவர்த்தி

Varun Chakaravarthy
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி மிகப்பெரிய முன்னிலையுடன் சூப்பர் போர் சுற்றுக்கு சென்றது. பின்னரும் இந்த சூப்பர் 4 சுற்றிலும் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்திய வீரர்கள் கேட்ச் விட இதுவே காரணம் : வருண் சக்ரவர்த்தி

சூப்பர் போர் சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணி இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேச அணியையும் வீழ்த்தி அசத்தியது. இந்த 2 வெற்றிகள் காரணமாக இந்திய அணியானது ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டது. அதனை தொடர்ந்து இந்த சூப்பர் போர் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று இலங்கை அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியையே சந்திக்காமல் மிகச் சிறப்பாக விளையாடி வருவது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஆனாலும் இந்த தொடரில் இந்திய அணியானது இதுவரை 12 கேட்ச்களை தவற விட்டுள்ளது. இதன்மூலம் இந்த தொடரில் அதிக காட்ச்களை தவறவிட்ட அணியாக இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது.

இந்நிலையில் இப்படி ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் நிறைய கேட்ச்களை தவறவிட என்ன காரணம்? என்பது குறித்து தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி பத்திரிகையாளர் சந்திப்பின் போது சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

உண்மையிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்த லெவலில் நாம் விளையாடும் போது கேட்ச் விட்டால் அது ஏற்றுக் கூடியது அல்ல. ஆனாலும் இங்கு நாம் நிறைய கேட்ச்களை தவற விட்டதற்கு காரணம் துபாய் சர்வதேச மைதானத்தில் உள்ள மின் விளக்குகளின் அமைப்பு தான். ஏனெனில் மைதானத்தை சுற்றியும் உயர் ரக மின் விளக்குகள் ஜொலிப்பதனால் பந்துகளை கணிக்க சிரமமாக இருக்கிறது.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு வந்த நற்செய்தி – 3 வீரர்கள் டாப் பார்ம்

குறிப்பாக பந்து மைதான உயரத்திற்கு மேலே சென்று மீண்டும் கண் பார்வைக்கு வரும்போது அதனை பார்ப்பதற்கும் சரி, கணிப்பதற்கும் சரி சற்று கடினமாகவே இருக்கிறது. அதன் காரணமாகவே கேட்ச்கள் தவறவிடப்படுகின்றன. இதற்காக பயிற்சியாளர்களும் எங்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர் என்று வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement