சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த கையோடு நாடு திரும்பும் இந்திய அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக டாப் பார்முக்கு வந்த 3 வீரர்கள் :
எதிர்வரும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் அதில் சுப்மன் கில் தலைமையில் 15 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியிருந்தது.
இவ்வேளையில் அடுத்ததாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள கே.எல் ராகுல், சாய் சுதர்சன் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்தவகையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது அதிகாரப்பூர்வ மற்ற டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரேல் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளது இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மாறியுள்ளது.
ஏனெனில் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 412 ரன்கள் என்கிற இலக்கினை இந்திய அணி சேசிங் செய்கையில் : இரண்டாவது இன்னிங்சின் போது கே.எல் ராகுல் ஆட்டமிழக்காமல் 176 ரன்களையும், சாய் சுதர்சன் 100 ரன்களையும், துருவ் ஜுரேல் 56 ரன்களையும் குவித்து இந்திய ஏ அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தனர்.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவால் நிச்சயம் 6 பாலுக்கு 6 சிக்ஸ் அடிக்க முடியும்.. அதுக்கு காரணம் இதுதான் – முகமது கைப் பேட்டி
இப்படி வெஸ்ட் இண்டீஸ் தொடர் துவங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் வேளையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூன்று வீரர்கள் டாப் பார்மில் இருப்பது இந்திய அணிக்கு நல்ல செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



