இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிகளுக்கு உதவி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த ஆசிய கோப்பை தொடரில் 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளிப்பதால் இந்திய அணி போட்டியின் ஆரம்பத்திலேயே வலுவான நிலையை எட்டுகிறது.
அபிஷேக் சர்மா 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடிப்பார் : முகமது கைப்
அப்படி இந்திய அணிக்கு தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் மிகப்பெரிய தூணாக அபிஷேக் சர்மா திகழ்ந்து வருகிறார். சர்வதேச டி20 போட்டிகளில் கடந்த ஆண்டுதான் அறிமுகமாகி இருந்தாலும் இதுவரை தான் விளையாடியுள்ள 22 ஆட்டங்களில் 2 சதம் மற்றும் 4 அரைசதம் என 783 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.
அதுமட்டும் இன்றி சர்வதேச டி20 கரியரில் தற்போது 58 சிக்ஸர்களை விளாசியுள்ள அவர் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருவதால் அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கான துவக்க வீரராக அவரே விளையாடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் அபிஷேக் சர்மாவால் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை நிச்சயம் விளாச முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : நான் அவருடைய பேட்டிங்கை பார்த்து 6 பந்தலுக்கு 6 சிக்ஸர்கள் அடிப்பார் என்று கூறவில்லை. அவருடைய இன்டெண்ட் தான் என்னை அப்படி கூற வைக்கிறது. ஏனெனில் எந்த ஒரு பவுலருக்கும் எதிராக பயப்படாமல் அவர் அடித்து விளையாட வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறார்.
அதன் காரணமாக அவரால் எந்த ஒரு பவுலருக்கு எதிராகவும் பவர்பிளே ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடி அவர்களை நிலைகுலைய வைக்க முடியும். அதோடு அவரால் நிச்சயம் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை வருங்காலத்தில் அடிக்க முடியும். அந்த அளவிற்கு அவருடைய மன உறுதியும், பேட்டிங் பலமும் இருக்கிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா பவர்பிளே ஓவர்களில் அதிரடியான துவக்கத்தை வழங்கி வந்தார்.
இதையும் படிங்க : வெ.இ தொடரில் பும்ராவை ட்ராப் பண்ணிட்டு அவங்களுக்கு சான்ஸ் கொடுத்திருக்கலாம்.. பதான் வித்யாச கருத்து
அந்தப் பணியை இனி யார் செய்யப் போகிறார்கள்? என்று எதிர்பார்த்த வேளையில் தற்போது அபிஷேக் சர்மா அதனை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். அவர் விளையாடி வரும் விதம் இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் மிகப்பெரிய பலத்தை சேர்த்துள்ளது என்றும் முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.



