வெ.இ தொடரில் பும்ராவை ட்ராப் பண்ணிட்டு அவங்களுக்கு சான்ஸ் கொடுத்திருக்கலாம்.. பதான் வித்யாச கருத்து

Irfan Pathan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அத்தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அவர் கடந்த இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

துரதிஷ்டவசமாக அந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் அவரை நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். அந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா 2 போட்டிகளிலும் முழுமையாக விளையாடுவார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பும்ராவை தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா தேர்வு:

ஏனெனில் சமீப காலங்களாகவே தடுமாறி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் இத்தொடரை நிச்சயம் வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்து இளம் பவுலர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி பதான் பேசியது பின்வருமாறு.

“இந்த முடிவு ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பைத் தவற விட்டுள்ளதை காட்டுகிறது. ஆனால் அதுவே நம்முடைய அணியின் தற்போதைய வழியாகும். ஒருவேளை நான் தேர்வாளர் அல்லது மேனேஜராக இருந்தால் கண்டிப்பாக ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரை கொண்டு வந்து வாய்ப்பளித்திருப்பேன். ஏனெனில் நீங்கள் வேகமான முடிவுகள் மட்டுமின்றி இளம் வீரர்கள் மேலே கவனம் செலுத்த வேண்டும்”

- Advertisement -

பதான் கருத்து:

“பும்ரா தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஈடுபடுவது சிறப்பான விஷயம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் இன்னும் தன்னுடைய முக்கியத்துவத்தைக் கொடுப்பது நல்லது. ஆனால் தேர்வாளர்கள் இந்தத் தொடரை பும்ராவுக்கு முறையான ஓய்வை கொடுத்து ஒரு வேகப்பந்து வீச்சாளரை வளர்க்க பயன்படுத்தி இருக்கலாம். அதை இந்தியா தங்களுடைய நீண்டகால தொலைநோக்கு பார்வையாகவும் வைத்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: 194க்கு அவுட்டாகியும் 412 ரன்ஸ் சேசிங்கில் ஆஸியிடம் மாஸ் காட்டிய இந்தியா ஏ.. ராகுல், சுதர்சனால் அபாரம்

“ஏனெனில் இந்திய அணிக்கு 8 நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட முழு தேவைப்படுகிறது. 3 – 4 பேர் மட்டும் போதாது” என்று கூறினார். இதற்கிடையே அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால் கருண் நாயருடன் அவருடைய கேரியரும் முடிவுக்கு வர உள்ளதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement