இந்தியா ஏ கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 23ஆம் தேதி துவங்கியது. லக்னோவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 420 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம் கோன்ஸ்டஸ் 49, டோட் முர்பி 76, கேப்டன் மெக்ஸ்வீனி 74, ஜேக் எட்வர்ட்ஸ் 88 ரன்கள் குவித்து அசத்தினர். இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக மாணவ் சுதர் 5, குர்நூர் ப்ரார் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.
194க்கு அவுட்டாகியும்:
அடுத்ததாக விளையாடிய இந்தியா ஏ அணி சுமாராக பேட்டிங் செய்து வெறும் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 75, ஜெகதீசன் 38 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ஹென்றி த்ரோன்டன் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்ததாக 226 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணியை அபாரமாக பந்து வீசிய இந்தியா ஏ வெறும் 185 ரன்கள் சுருட்டி வீசியது. அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனி 85*, பிலிப் 55 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ அணிக்கு முகமது சிராஜ் 2, யாஷ் தாக்கூர் 2 மாணவ் சுதர் 3, குர்நூர் ப்ரார் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
திருப்பி அடித்த இந்தியா:
இறுதியில் 412 என்ற மெகா இலக்கைத் துரத்திய இந்தியா ஏ அணிக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ஜெகதீசன் 36 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் – தமிழக வீரர் சாய் சுதர்சன் நங்கூரமாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதில் அரை சதத்தை அடித்த ராகுல் 73 ரன்கள் அடித்த போது காயத்தால் ரிட்டயர்ட் ஹர்டாகி சென்றார்.
அடுத்து வந்த தேவ்தூத் படிக்கல் 5, மாணவ் சுதர் 5 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சுதர்சன் அரை சதத்தை அடித்தார். அவருடன் கடைசி நாளில் காயத்தை தாண்டி ஜோடி சேர்ந்து விளையாடிய ராகுல் சதத்தை அடித்தார். நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடிய அந்த ஜோடி 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது சுதர்சன் சதத்தை அடித்து 100 (172) ரன்னில் அவுட்டானார்.
இதையும் படிங்க: அந்த பாகிஸ்தான் வீரரை விட அக்சர் படேல் ஒன்னும் பெஸ்ட் கிடையாது.. வன்மத்தை கக்கிய – சோயிப் அக்தர்
அடுத்ததாக வந்த கேப்டன் துருவ் ஜுரேல் சிறப்பாக விளையாடி 56 (66) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 16* (14) ரன்கள் எடுத்த நிலையில் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாத ராகுல் 176* (210) ரன்கள் குவித்தார். அதனால் 413/5 ரன்கள் எடுத்த இந்தியா ஏ அரை நாள் மீதம் வைத்து 5 வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0 (2) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா ஏ சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்ற மாஸை காண்பித்துள்ளது.



