யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவை பின்னுக்கு தள்ளி வருண் சக்கரவர்த்தி – நிகழ்த்திய சாதனை

Varun Chakaravarthy
- Advertisement -

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக மே 3-ஆம் தேதி நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணியானது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அவர்கள் இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளனர்.

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவை பின்னுக்கு தள்ளிய வருண் சக்கரவர்த்தி :

அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியை கொல்கத்தா அணி 165 ரன்களில் தடுத்து நிறுத்தியது. பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 18.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது. ஏனெனில் இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 36 ரன்களை விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். அதன்காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர் இந்த போட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருதின் மூலம் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஒரு மாபெரும் சாதனை ஒன்றினையும் ஐ.பி.எல் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார். அப்படி அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐ.பி.எல் போட்டிகளில் ரிஸ்ட் ஸ்பின்னராக அதிக ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரர்களின் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஏழு முறை ஆட்டநாயகன் விருதினை வென்று மூன்றாவது இடத்தில் இருந்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க நெனச்சது இந்த போட்டியில் நடக்கல.. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் பேட்டி

இவ்வேளையில் இன்றைய போட்டியில் வருண் சக்கரவர்த்தி பெற்ற ஆட்டநாயகன் விருது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது எட்டாவது ஆட்டநாயகன் விருதாக பதிவாகியுள்ளது. இதன்மூலம் சாஹல் மற்றும் குல்தீப் ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற ரிஸ்ட் ஸ்பின்னராக ரஷீத் கான் (13முறை) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து அமித் மிஸ்ரா (12முறை) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Advertisement