நாங்க நெனச்சது இந்த போட்டியில் நடக்கல.. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் பேட்டி

Pat Cummins
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது தங்களது சொந்த மண்ணில் கொல்கத்தா அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : பேட் கம்மின்ஸ் பேட்டி

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது : உண்மையிலேயே இந்த நாள் எங்களுக்கான சிறந்த நாளாக அமையவில்லை. நாங்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங்கை துவங்கியிருந்தோம். ஆனாலும் அதன்பிறகு அதனை சரியாக கொண்டு செல்ல முடியவில்லை.

எங்கள் அணி வீரர்கள் கொடுத்த துவக்கத்திற்கு நிச்சயம் 200 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் 180 ரன்கள் கூட தொடாமல் ஆட்டமிழந்துள்ளோம். ஒருவேளை 180 ரன்கள் வரை அடித்திருந்தால் இந்த போட்டி சற்று சவாலாக இருந்திருக்கும். ஆனால் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியாமல் போனதே இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு காரணமாக நான் பார்க்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணியை இவ்ளோ ஈஸியா வீழ்த்த இவர்களே காரணம் – அஜின்க்யா ரஹானே புகழாரம்

அதேபோன்று இரண்டாம் பாதியில் கொல்கத்தா அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர். இன்னும் இலக்கு சற்று கூடுதலாக அமைத்திருந்தால் இந்த போட்டியில் நாங்கள் இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement