லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 64-வது போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை மிகச் சிறப்பாக துரத்தி 19.1 ஓவரிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 225 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.
கொண்டாட்டத்திற்கான காரணத்தை கூறிய : வைபவ் சூர்யவன்ஷி
இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான வைபவ் சூரியவன்சி 38 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 10 சிக்சர் என 93 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாக நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த தொடரில் ஏற்கனவே ஒரு சதம் விளாசியுள்ள வைபவ் சூர்யவன்ஷி நேற்றைய போட்டியில் சதத்தை தவறவிட்டது சற்று ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் அவரது இந்த அதிரடியான ஆட்டம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. நேற்றைய இந்த போட்டியின் போது 50 ரன்களை கடந்த நிலையில் கிளவுசை கழட்டிய வைபவ் சூரியவன்சி கையில் “ஏ” என்ற எழுத்தை காண்பித்து வித்தியாசமான ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து அந்த கொண்டாட்டத்திற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த வைபவ் சூர்யவன்ஷி கூறியதாவது : உண்மையிலேயே நான் ஏன் அந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன் என்பது எனக்கு தெரியாது? ஒவ்வொரு போட்டியிலும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதற்கு பின்னால் எந்த ஒரு அர்த்தமும் கிடையாது.
இதையும் படிங்க : இப்படி ஒரு வெற்றி ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது.. லக்னோவை வீழ்த்திய பிறகு – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி
கடந்த போட்டியின் போதும் இதே போன்ற செலிப்ரேஷனில் தான் ஈடுபட்டேன். ஏதோ எனக்கு தோன்றிய புதிய விடயங்களை செய்ய வேண்டும் என இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக குழந்தைத்தனமாக அவர் நகைச்சுவடன் பதில் சொன்னது குறிப்பிடத்தக்கது.



