நான் கிரீஸில் இருக்கும் வரை எதிரில் இருக்கும் அவர்களை சும்மா விடமாட்டேன் – வைபவ் சூர்யவன்ஷி அதிரடி

Vaibhav Suryavanshi
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்சி இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அந்த அணியின் முதன்மை வீரராக இடம்பிடித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை இந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணி சார்பாக 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 236 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 246 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இனிவரும் போட்டிகளிலும் அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

என்னுடைய கனவில் பாதி நிறைவேறி இருக்கு.. மீதி பாக்கி இருக்கு : வைபவ் சூர்யவன்ஷி

அதோடு இந்த ஐபிஎல் தொடரில் பும்ராவை எதிர்த்து விளையாடிய முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்த அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் மிக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவருக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

- Advertisement -

இவ்வேளையில் வைபவ் சூர்யவன்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் இனிவரும் போட்டிகளில் தான் எவ்வாறு விளையாடப்போகிறேன் என்பது குறித்து பேசியுள்ள சூர்யவன்ஷி அதில் கூறியதாவது : நான் கிரீஸில் இருக்கும் வரை எதிரணியிடம் இருந்து வெற்றியை பறிக்கும் சக்தி என்னிடம் உண்டு. நான் எவ்வளவு நேரம் ஆடுகளத்தில் இருக்கிறேனோ அவ்வளவு நேரமும் எனது திறமையால் பௌலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாடுவேன்.

நான் கிரீசில் இருக்கும் வரை நிச்சயம் எதிரணியை வெற்றிபெற விடமாட்டேன். எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் அதிரடியாக விளையாடுவேன் அது மட்டும் தான் என்னுடைய நினைப்பாக இருக்கிறது. அதேபோன்று தற்போது எனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறேன். என்னுடைய கனவில் பாதி இப்போது நடந்தாலும் இன்னும் மீதி நிறைய பாக்கி இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : மிடில் ஓவர்களில் நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் எல்லாத்துக்கும் காரணம் – சுப்மன் கில் வெளிப்படை

இந்திய சீனியர் அணிக்காக உலக கோப்பையில் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டியது என்னுடைய லட்சியம். ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும் அதே கனவுதான் எனக்கும் உள்ளது. அதை நோக்கி பயணிக்க காத்திருக்கிறேன் என வைபவ் சூர்யவன்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement