மிடில் ஓவர்களில் நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் எல்லாத்துக்கும் காரணம் – சுப்மன் கில் வெளிப்படை

Shubman Gill
- Advertisement -

அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது தங்களது சொந்த மைதானத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மிடில் ஓவர்களில் நாங்கள் தவறு செய்துவிட்டோம் : சுப்மன் கில்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவிக்க அடுத்ததாக 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி குஜராத் அணி 15.5 ஓவர்களில் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அசைத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியின் மிடில் ஓவர்களில் நாங்கள் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். இந்த ஆடுகளத்தில் 160 முதல் 170 ரன்கள் வரை அவர்களை நாங்கள் அடிக்க விட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்.

ஆனால் கூடுதலாக ரன்களை கசிய விட்டு விட்டோம். இந்த போட்டியில் இருந்து பல்வேறு விடயங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். கடந்த இரண்டு போட்டிகளாகவே நாங்கள் நிறைய தவறுகளையும் செய்துள்ளோம். நிச்சயம் அதையெல்லாம் திருத்திக்கொண்டு மீண்டும் வெற்றியின் பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : திலக் வர்மாவை பார்த்து கத்தியது ஏன்? கேப்டனா இதைத்தான் செய்ய நினைத்தேன் – பாண்டியா விளக்கம்

இந்த மைதானத்தில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது பந்து கொஞ்சம் நின்று வந்தது. அதனால் நினைத்த இடத்தில் எங்களால் பந்துகளை அடிக்க முடியவில்லை. அதேபோன்று பெரிய பார்ட்னர்ஷிப்பும் அமைக்க முடியாமல் போனதால் இந்த போட்டியில் நாங்கள் பின்னடைவை சந்தித்தோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement