இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது :
திலக் வர்மாவை திட்டியது ஏன்? : ஹார்டிக் பாண்டியா விளக்கம்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 101 ரன்களையும், நமன் தீர் 45 ரன்களையும் குவித்தனர். பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது : உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக அமைந்தது. அகமதாபாத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போது விளையாடினாலும் அது கடினமான ஒரு போட்டியாகவே அமையும். அந்த வகையில் இந்த போட்டி கடினமாக அமைந்தாலும் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி.
திலக் வர்மாவை பார்த்து நான் கூறியது எல்லாம் ஒரே விடயம்.தான். திலக் வர்மா எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் அவர் ஒரு அற்புதமான திறமை உடையவர். நான் அவரிடம் சென்று பந்தை பார்த்து அதற்கு மரியாதை கொடுக்காமல் அடித்து நொறுக்கு என்று கூறினேன். ஏனெனில் அவர் மிகச்சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். எனவே நிச்சயம் அவரால் இதைப்போன்ற ஒரு அதிரடியான ஆட்டத்தை வழங்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
இதையும் படிங்க : 3 நாளைக்கு முன்னாடி அணியில் இணைந்த வீரருக்கு உடனடியாக அறிமுக வாய்ப்பை வழங்கிய – மும்பை இந்தியன்ஸ்
அதனாலே அவருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் கத்தினேன். தற்போதைய நிலையில் திலக் வர்மாவிற்கும் சரி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சரி ஒரு கேப்டனாக இது போன்ற ஒரு ஊக்குவிப்பு அவசியம் என்றும் நினைத்தேன். அதன் காரணமாகவே மைதானத்தில் சற்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினேன் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



